ரிஷ்யசிங்கர் (1964 திரைப்படம்)

ரிஷயசிங்கர்
Rishya Singar
இயக்கம்முக்காமலா
தயாரிப்புபி. எஸ். சேசாச்சலம்
திரைக்கதைதஞ்சை இராமையாதாஸ்
எம். எஸ். சுப்பிரமணியம்
இசைடி. வி. இராஜூ
நடிப்புகே. பாலாஜி
சித்தூர் வி. நாகையா
ராஜசுலோசனா
கிரிஜா
ஒளிப்பதிவுஆதி ஏ. இராணி
மல்லி எம். இராணி
படத்தொகுப்புஏ. சஞ்சீவி
கலையகம்இராவணன் பிரதர்சு
விநியோகம்கீதா பிக்சர்சு
வெளியீடு1964 (1964)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரிஷ்யசிங்கர் 1964 இல் முக்காமலா இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் கே. பாலாஜி, ராஜசுலோசனா ஆகியோர் நடித்திருந்தனர்.

கதைச்சுருக்கம்

இக்கதை இந்திய முனிவர் ரிஷியசிரிங்கா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.

நடிகர்கள்

பின்வரும் பட்டியல் திரைக்களஞ்சியம் பகுதி 2 புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.[2]  

நடிகர்கள்

நடிகைகள்

தயாரிப்பு

இப்படம் முதன்முதலில் தெலுங்கில் ருஷ்யஸ்ருங்கா என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டு 1961 இல் வெளியிடப்பட்டது.[3] முக்காமலா இயக்கிய இப்படத்தை இராவணன் பிரதர்சு என்ற பெயரில் பி. எஸ். சேசாச்சலம் தயாரித்தார். கீதா பிக்சர்சு நிறுவனம் வித்தியாசமான நடிகர்களுடன் தமிழில் கதையை திரையிட்டு 1964இல் வெளியிட்டது. முக்காமலா தமிழ்ப் படத்தையும் இயக்கினார். தஞ்சை என். ராமையா தாஸ், எம். எஸ். சுப்பிரமணியம் ஆகியோர் உரையாடல்களை எழுதியுள்ளனர். ஆதி எ. இராணி, மல்லி எம். இராணி ஆகியோர் ஒளிப்பதிவைப் பொறுப்பேற்றனர். படத்தொகுப்பை எ. சஞ்சீவி மேற்கொண்டார். கலை இயக்கம் டி. வி. எஸ். சர்மா, எம். சோமநாத் ஆகியோரால் செய்யப்பட்டது. பசுமூர்த்தி கிருஷ்ணமூர்த்தி நடன அமைப்பை மேற்கொண்டார். ஆர். என். நாகராஜா ராவ் புகைப்படம் எடுக்கும் பணியை மேற்கொண்டார். விஜயா, வாகினி, நெப்டியூன் சுடுடியோக்களில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் விஜயா ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது.

பாடல்கள்

பாபநாசம் சிவன், தஞ்சை என். ராமையா தாஸ், எம். எஸ். சுப்பிரமணியம் ஆகியோரால் பாடல் வரிகள் எழுதப்பட்டது. டி. வி. ராஜு இசையமைத்துள்ளார்.[2]

மேற்கோள்கள்

  1. "Rishyasringar". megatamil.in. Archived from the original on 28 September 2018. Retrieved 27 September 2018.
  2. 2.0 2.1 Neelamegam, G. (November 2016). Thiraikalanjiyam – Part 2 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. pp. 174–175.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1998) [1994]. Encyclopaedia of Indian Cinema. British Film Institute and Oxford University Press. p. 637. ISBN 0-19-563579-5.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya