கே. பாலாஜி
கே. பாலாஜி (K. Balaji, 24 சூன் 1934 – 2 மே 2009) பழம்பெரும் திரைப்பட நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். கதாநாயகனாக, எதிரியாக, குணச்சித்திர நடிகராக தமிழ்த் திரையுலகில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நடித்து வந்தவர். படித்தால் மட்டும் போதுமா, பலே பாண்டியா உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்தவர். பல திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். இவரது அசாத்தியமான வில்லத்தனத்தை பாராட்டி இவருக்கு "பீமன் பாலாஜி" பொருத்தமான பெயரை வழங்கினர். வாழ்க்கைக் குறிப்புபாலாஜியின் பூர்வீகம் கேரளா. தொடக்க காலத்தில் இவர் சென்னை கிண்டியில் இருந்த நரசுஸ் சுடூடியோவில், தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார். 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ஔவையார் என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். அதைத் தொடர்ந்து, சகோதரி, பலே பாண்டியா, படித்தால் மட்டும் போதுமா ஆகிய படங்களில் துணை நடிகராக நடித்துப் பிரபலமானார். மனமுள்ள மறுதாரம் (1958) படத்தில் கதைத் தலைவனாக நடித்தார். படத் தயாரிப்புபாலாஜி தனது சுஜாதா சினி ஆர்ட்சு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்தார். ஜெமினி கணேசன் கதைத் தலைவனாக நடித்த அண்ணாவின் ஆசை என்ற படத்தை முதன் முதலாக சொந்தமாக தயாரித்தார். அதன்பிறகு சிவாஜி கணேசனை வைத்து தங்கை, என் தம்பி, திருடன், எங்கிருந்தோ வந்தாள், ராஜா, நீதி, என் மகன், உனக்காக நான், தீபம், தியாகம், நல்லதொரு குடும்பம் உள்பட 17 திரைப்படங்களை தயாரித்தார். சிவாஜியை வைத்து தொடர்ந்து அதிக படங்கள் தயாரித்த பட அதிபர் இவர்தான். இந்தி, தெலுங்கு, மலையாள படங்களை இவர் மறு தயாரிப்பு செய்து பல வெற்றிப் படங்களைக் கண்டவர். கமல், ரஜினிகாந்த் ஆகியோரை நடிக்க வைத்தும் வெற்றிப் படங்களை அளித்துள்ளார் பாலாஜி. மிகச் சிறந்த வகையில் குறித்த காலத்தில் படத்தை எடுத்து வெளியிடும் திறன் கொண்ட படத் தயாரிப்பாளராகவும் பாலாஜி திகழ்ந்தார் பாலாஜியின் மனைவி பெயர் ஆனந்தவல்லி. இவர்களுக்கு சுரேஷ் பாலாஜி (கிரீடம் திரைப்படத்தைத் தயாரித்தவர்) என்ற மகனும், சுஜாதா, சுசித்ரா என்ற 2 மகள்களும் இருக்கிறார்கள். சுசித்ராவை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மணந்து இருக்கிறார். நடித்த திரைப்படங்கள்
இறப்பு2009, மே 2 மாலை 5 மணிக்கு உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் பாலாஜி இறந்தார். இறக்கும் போது இவருக்கு வயது 74. மேற்கோள்கள்
உசாத்துணை |
Portal di Ensiklopedia Dunia