ரீமா தாஸ்
ரிமா தாஸ் ( Rima Das ; பிறப்பு 1982) ஒரு இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். 2017 ஆம் ஆண்டு வெளியாகி பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் திரைப்படத்திற்காக மிகவும் பிரபலமானவர். [1] [2] மேலும் திரைப்பட வகையில் சிறந்த வெளிநாட்டு மொழிக்கான 90வது அகாதமி விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவு ஆனது.[3] [4] இது அகாதமி விருதுக்கு சமர்ப்பிக்கப்பட்ட முதல் அசாமிய திரைப்படமாகும். [3] இந்தப் படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது மற்றும் சிறந்த படத்தொகுப்பிற்கான இந்தியாவின் தேசிய விருதையும் வென்றது. அமெரிக்க ஆண்களுக்கான மாத இதழின் இந்தியப் பதிப்பான GQ இந்தியா 2018 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க 50 இளம் இந்தியர்களில் ஒருவராக இவரைப் பெயரிட்டது. [5] தொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் விளம்பரத் தூதுவர்களில் ஒருவராக உள்ளார். இதில் திரைப்படங்களில் பாலின சமத்துவத்திற்கான காரணத்தை முன்வைக்கும் ஷேர் ஹெர் ஜர்னி பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.[6] பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா தலைமுறை 14 பிளஸ், மும்பை சர்வதேச திரைப்பட விழா, தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழா மற்றும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான ஸ்லின் திரைப்பட விழா ஆகியவற்றின் நடுவர் மன்றத்திலும் இருந்துள்ளார். [7] [8] [9] [10] பிப்ரவரி 2018 இல் சிறீமந்தா சங்கர்தேவா சர்வதேச கலையரங்கத்தில் நடைபெற்ற கிருஷ்ண காந்தா ஹண்டிகி மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (KKSHOU) 3வது பட்டமளிப்பு விழாவில் ரீமா தாஸுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது [11] தொழில்பிரதா என்ற தனது முதல் குறும்படத்தை 2009இல் உருவாக்கினார். பின்னர், தனது சொந்த கிராமமான கலார்டியாவில் கேனான் டி.எஸ்.எல்.ஆர் கருவி மூலம் படமாக்கப்பட்ட தனது முதல் திரைப்படமான அந்தர்த்ரிஷ்டி (மேன் வித் பைனாகுலர்ஸ்) படத்தின் பணியைத் தொடங்கினார். 2016 ஆம் ஆண்டில், அந்தர்த்ரிஷ்டி மும்பை திரைப்பட விழாவிலும், தாலின் பிளாக் நைட்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. [12] [13] [14] திரைப்படத் தயாரிப்பின் எந்த அம்சத்திலும் பயிற்சி பெறவில்லை, என்றாலும், ஒரு திரைப்படத்தை எழுதுதல், இயக்குதல், தயாரித்தல், படத்தொகுப்பு செய்தல் மற்றும் படமாக்குதல், கலை இயக்கம் மற்றும் ஆடை வடிவமைப்பு ஆகியவற்றைக் கையாளுதலில் ஒரு பெண் குழுவாக அறியப்பட்டார். இது, தனது தொழில் வாழ்க்கைக்கு ஒரு வாய்ப்பாக மாறியதாக நம்புகிறார்: தனிப்பட்ட வாழ்க்கைஅசாமின் குவஹாத்திக்கு தென்மேற்கே 50 கி.மீ. தொலைவிலுள்ள சாய்கான் அருகே உள்ள கலார்டியா கிராமத்தைச் சேர்ந்தவர்.[15] ஒரு ஆசிரியரின் மகளான இவர் புனே பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலை பட்டத்திற்குப் பிறகு தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றார். [15] ஆனால் நடிகராக வேண்டும் என்ற ஆசை 2003ல் மும்பைக்கு அழைத்துச் சென்றது. பிரித்வி நாடக அரங்கத்தில் அரங்கேற்றப்பட்ட பிரேம்சந்தின் கோடான்என்ற நாடகத்தில் தழுவல் உட்பட பல நாடகங்களில் நடித்துள்ளார். [15] சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia