ரெட் ரிவர் (1948 திரைப்படம்)
ரெட் ரிவர் (Red River) என்பது 1948ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க மேற்கத்தியத் திரைப்படமாகும். இதை ஹோவார்டு ஹாக்சு இயக்கித் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் யோவான் வெயின் மற்றும் மான்டிகோமெரி கிலிப்ட் ஆகியோர் நடித்திருந்தனர். த சிசோல்ம் டிரைல் வழியாக டெக்சஸ் முதல்கேன்சஸ் வரையிலான முதல் கால்நடை ஓட்டுதலை ஒரு புனையப்பட்ட கதையாக இத்திரைப்படம் கூறியது. டெக்சஸ் பண்ணையாளர் வெயின் மற்றும் அவரது தத்தெடுக்கப்பட்ட மகன் கிலிப்ட் இடையிலான பிணக்குகளை இத்திரைப்படம் கூறியது. வெளியான நேரத்தில், ரெட் ரிவர் திரைப்படமானது வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இரண்டு அகாதமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.[5] 1990ல் ரெட் ரிவர் திரைப்படமானது ஐக்கிய அமெரிக்க தேசிய திரைப்படம் பதிவேட்டில் காக்கப்படுவதற்காக அமெரிக்கக் காங்கிரசு நூலகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது. "கலாச்சார, வரலாற்று மற்றும் கலைநயமிக்க" படம் எனக் குறிப்பிடப்பட்டது.[6][7] 2008ஆம் ஆண்டு அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் 10 முதல் 10 பட்டியலில் எக்காலத்திலும் சிறந்த ஐந்தாவது மேற்கத்திய திரைப்படமாக ரெட் ரிவர் திரைப்படமானது அமெரிக்க திரைப்பட நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது. உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia