லகேரி நகரம்லகேரி என்பது இந்திய மாநிலமான ராஜஸ்தானின் பூந்தி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது ராஜஸ்தானின் தென்கிழக்கில்[1] மாநில தலைநகரான செய்ப்பூருக்கு தெற்கே 180 கிலோமீட்டர் (112 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. லகேரி 2002 முதல் துணைப்பிரிவு தலைமையகமாக இருந்து வருகிறது. கரிமா லதா (ஆர்ஏஎஸ்) லகேரி துணைப்பிரிவின் துணை ஆட்சியர் மற்றும் நீதிபதி ஆவார். இது பூந்தி நகரத்திற்கு அடுத்தபடியாக மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும், ராஜஸ்தானில் 104 வது பெரிய நகரமாகவும் உள்ளது. பெரும்பாலும் விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களால் சூழப்பட்ட, லகேரியின் மிகவும் தனித்துவமான அம்சம் அசோசியேட்டட் சிமென்ட் கம்பெனி (ஏசிசி) என்ற நிறுவனத்தின் சிமென்ட் (காரை) உற்பத்தி ஆலை ஆகும். இந்த ஆலை 1912-1913 இல் திறக்கப்பட்டு, ஆசியாவில் மிக நீண்ட காலமாக இயங்கும் சிமென்ட் ஆலை ஆகும். காலப்போக்கில், இந்த ஆலை சிமென்ட் உற்பத்தியில் சமீபத்திய தொழில்நுட்பங்களை இணைத்து விரிவாக்கங்களுக்கு உட்பட்டுள்ளது. சமீபத்திய விரிவாக்க திட்டம் ஏப்ரல் 2007 இல் நிறைவடைந்தது. ஏ.சி.சி.யின் நிர்வாக இயக்குநர், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், லகேரி ஆலையின் சிமென்ட் உற்பத்தியில் 12–15% உயர்வு இருக்கும் என்று கணித்துள்ளார். நிலவியல்லகேரி 25°40′N 76°10′E / 25.67°N 76.17°Eஇல் அமைந்துள்ளது.[2] இது தென்கிழக்கு ராஜஸ்தானில் அமைந்துள்ள அதோதி என்று பரவலாக அறியப்படும் ஹதா குலத்தினரின் நிலமாகும். நகரத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மெஸ் நதி, லகேரியின் புறநகர்ப் பகுதி வழியாகச் செல்கிறது.[3] கடல் மட்டத்திலிருந்து இதன் சராசரி உயரம் 252 மீட்டர்கள் (827 அடி). தொடர்ச்சியான கால்வாய்களால் வழங்கப்படும் நீர்ப்பாசனத்துடன் வளமான நிலமும் பசுமையும் லகேரியில் உள்ளது. நகரம் மூன்று பக்கங்களிலும் சிறிய மலைகளால் சூழப்பட்டுள்ளது. லகேரியின் அசோசியேட்டட் சிமென்ட் கம்பெனி (ஏசிசி) நிறுவனம் மெஸ் நதியில் கட்டிய நீர் எக்கி நிலையம் உள்ளது. லகேரி அருகே மெஸ் நதியில் அணை கட்டப்பட்டுள்ளது. ஊருக்கு அருகே மழைநீரைச் சேமிக்க ஒரு சிறிய நீர் தேக்கமும், ஜிக்ஜாக் அணையும் கட்டப்பட்டுள்ளன. இந்த நகரத்தில் மகேஷ் தாகர் என்ற சிறிய குளம் அமைந்துள்ளது.[4] லகேரி மாவட்ட தலைமையகமான பூந்தி நகரத்திலிருந்து 65 கிலோமீட்டர் (40 மைல்) தொலைவிலும், கோட்டா நகரத்திலிருந்து 75 கிலோமீட்டர் (47 மைல்) தொலைவிலும் உள்ளது. காலநிலைலகேரி அரை வறண்ட காலநிலையில் ( கோப்பென் காலநிலை வகைப்பாடு பி.எஸ்.எச் ) ஆண்டு முழுவதும் அதிக வெப்பநிலையுடன் கொண்டுள்ளது. மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஜூன் மாத இறுதி வரை நீடிக்கும் கோடைக் காலம் நீளமாகவும், வெப்பமாகவும், வறண்டதாகவும் இருக்கும். மே மற்றும் ஜூன் மாதங்களில் வெப்பநிலை சராசரியான 40 °C (104 °F) மற்றும் 45 °C (113 °F) ஐ விட அதிகமாக இருக்கும்; 48.4 °C (119.1 °F) வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.[5] மழைக்காலம் அதிக ஈரப்பதம் மற்றும் அடிக்கடி பெய்யும் மழையால், ஒப்பீட்டளவில் குறைந்த வெப்பநிலையுடன் தொடர்கிறது. ஆனால் அக்டோபரில் பருவமழை தணிந்து வெப்பநிலை மீண்டும் உயரும். குறுகிய லேசான குளிர்காலம் நவம்பர் பிற்பகுதியில் தொடங்கி பிப்ரவரி கடைசி வாரம் வரை நீடிக்கும். கோடையில் கடுமையான வெப்பம் இருப்பதால் லகேரிக்குச் செல்ல இது சிறந்த நேரமாகக் கருதலாம்.[6] லகேரியில் சராசரி ஆண்டு மழை 659 மிமீ (25.9 அங்குலம்) ஆகும்.[6] பெரும்பாலான மழைப்பொழிவுகளுக்கு தென்மேற்கு பருவமழை காரணமாக இருக்கலாம். இது ஜூன் கடைசி வாரத்தில் தொடங்கி செப்டம்பர் நடுப்பகுதி வரை நீடிக்கும். மழைக்காலத்திற்கு முந்தைய மழை ஜூன் நடுப்பகுதியிலும், மழைக்காலத்திற்கு பிந்தைய மழை அவ்வப்போது அக்டோபரில் பெய்யும். குளிர்காலம் பெரும்பாலும் வறண்டது, இருப்பினும் வெப்பமண்டலச் சேய்மைப் புயல் காரணமாக இப்பகுதியில் சில நேரங்களில் மழை பெய்யும். மக்கள் தொகையியல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[7] லக்கேரி மக்கள் தொகை 29,572 ஆகும். ஆண்களின் எண்ணிக்கை 15,222 (51%), பெண்கள் 14,350 (49%). லகேரியின் சராசரி கல்வியறிவு விகிதம் 76.87%, இது மாநில சராசரியான 66.11% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 89.8%, மற்றும் பெண் கல்வியறிவு 63.265%. லகேரியில், மக்கள் தொகையில் 13% (3,844) ஆறு வயதுக்குட்பட்டவர்கள். லகேரியில் ராஜஸ்தானியின் கிளைமொழியான ஹராட்டி மொழி பரவலாக பேசப்படுகிறது. மேலும் இந்தி மற்றும் ஆங்கிலம் மற்ற மொழிகளும் பேசப்படுகின்றன.[8] 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நகரத்தில் பெரும்பான்மையான மதமாக இந்து மதம் உள்ளது. இது மக்கள் தொகையில் சுமார் 83.2% ஆகும். பெரிய சிறுபான்மையினராகமுஸ்லிம்கள் (14.07%), ஜெயின் (1.34%), சீக்கியர்கள் (0.9%), மற்றும் கிறிஸ்தவர்கள் (0.4%) உள்ளனர். போக்குவரத்துஇந்த நகரம் பிரதான தில்லி - மும்பை எல்லைக்கு இடையில் அமைந்துள்ளது. லகேரியிலிருந்து கோட்டா, ஜெய்ப்பூர் மற்றும் பல பெரிய நகரங்களுக்கு தினமும் 1000 க்கும் மேற்பட்ட பயணிகள், உள்ளூர் இரயில்களான டெஹ்ராடூன் எக்ஸ்பிரஸ், அவத் எக்ஸ்பிரஸ், ஃபிரோஸ்பூர் ஜந்தா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பயணம் செய்கிறார்கள். இந்த நகரம் முன்பு இந்திய இரயில்வேயால் புறக்கணிக்கப்பட்டு, எந்த பயணிகள் இரயில் நிறுத்தங்களையும் வழங்கவில்லை. படிப்படியாக, கோட்டா ஸ்ரீகங்காநகர் எஸ்.எஃப், ஜோத்பூர் இந்தூர் எஸ்.எஃப் போன்ற ரயில் நிறுத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் சாலைவழிகளில் வழக்கமான பேருந்து சேவையும், எக்ஸ்பிரஸ், சில்வர் லைன் அல்லது ப்ளூ லைன் பேருந்துகளும் இல்லாததால் இந்நகரத்தில் பேருந்து சேவை மோசமாக உள்ளது. நகரத்தில் சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு புதிய "மெகா நெடுஞ்சாலை" சாலை, போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துகிறது. கோட்டா, பூந்தி நகரம் மற்றும் ஜெய்ப்பூருக்கு ராஜஸ்தான் மாநில சாலை போக்குவரத்துக் கழக பேருந்து சேவைகள் உள்ளன. ஒரு ஆர்.எஸ்.ஆர்.டி.சி பஸ் சேவை கோட்டாவிலிருந்து ஆல்வார் வரை, ஆல்வார் முதல் கோட்டா வரை லக்கேரி வழியாக உள்ளது.[9] சுகாதார சேவைகள்நகரத்தில் பின்வருபவை தவிர பிற மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை உள்ளது, : [ மேற்கோள் தேவை ]
கல்விநகரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அல்லது ராஜஸ்தானின் இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆங்கிலம் அல்லது இந்தி வழியில் 10 + 2 திட்டத்தைப் பின்பற்றுகின்றன. லகேரிக்கு அருகிலுள்ள மண்டல தலைமையகமான கோட்டா கல்வி நகரமாக அறியப்படுகிறது. கடந்த தசாப்தத்தில், இந்நகரம் போட்டித் தேர்வு மற்றும் இலாப நோக்கற்ற கல்வி சேவைகளுக்கான பிரபலமான பயிற்சியளிப்பு இடமாக உருவெடுத்துள்ளது. "இந்தியாவின் பயிற்சி தலைநகரம்" என்று குறிப்பிடப்படும் கோட்டாவின் கல்வித் துறை, இந்நகரத்தின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பாக மாறியுள்ளது.[10][11][12] இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (ஐ.ஐ.டி) - கூட்டு நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ), தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்-யுஜி) மற்றும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) [13][14][15][16][17] போன்ற பல்வேறு தேர்வுகளுக்கு நாடு முழுவதும் இருந்து 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நகரத்திற்கு வருகிறார்கள். பயிற்சி மையங்களுக்கு அருகிலுள்ள கோட்டாவில் பல விடுதிகள் மற்றும் மாணவர்களுக்கான பி.ஜி. மாணவர்கள் இங்கு 2-3 ஆண்டுகள் வாழ்ந்து தங்கள் தேர்வுகளுக்குத் தயாராகிறார்கள். கடந்த சில ஆண்டுகளில், நகரத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட செய்திகள் அதிகரித்துள்ளன. இந்த அறிக்கைகளின்படி, மாணவர்கள் மன அழுத்தத்தை உணர்கிறார்கள் மற்றும் அவர்கள் போட்டித் தேர்வை முறியடிக்க அழுத்தம் கொடுக்கப்படுகிறார்கள். இந்நிலையினை சமாளிக்க, பல பயிற்சி மையங்கள் மாணவர்களுக்கு உதவ ஆலோசகர்களை நியமித்துள்ளன.[18][19][20][21] கல்லூரி
லகேரி மூவி மேக்கர்ஸ்லகேரி சார்ந்த சிறுவர்களான பவன் சர்மா மற்றும் அபிநவ் மீனா ஆகியோரால் 2014 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு வீடியோ கிராபரி மற்றும் காணொலி பதிப்பித்தல் தயாரிப்புதான் லகேரி மூவி மேக்கர்ஸ் [22]. 2017 ஆம் ஆண்டில் லகேரி மூவி மேக்கர்ஸ் லகேரி தர்சன் [23] என்ற ஆவணப்படத்தை உருவாக்கியது, இது லகேரி நகரத்தின் இயற்கை, மத, வரலாற்று சுற்றுலா இடங்கள் மற்றும் தொழில்களைப் பெறுவதற்கான ஒரு சமூக முயற்சியாகும். லகேரி தர்சன் பவன் சர்மா இயக்கியது. ஆவணப்படம் தொடர்பான உண்மைகள் மற்றும் தொடர்புடைய நபர்கள் விவரங்களை இணையம் மற்றும் லகேரி பிச்சலே பன்னே ஆகியோரிடமிருந்து பெறப்பட்டது. குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia