லங்கா சமசமாஜக் கட்சி
லங்கா சமசமாஜக் கட்சி (Lanka Sama Samaja Party, சிங்களம்: ලංකා සම සමාජ පක්ෂය, இலங்கை சமத்துவ சமூகக் கட்சி) என்பது இலங்கையின் ஒரு பழம்பெரும் திரொட்ஸ்கியிச அரசியல் கட்சியாகும். லங்கா சமசமாஜக் கட்சி 1935 டிசம்பர் 18 இல் இலங்கையின் விடுதலை, மற்றும் சோசலிசத்தைக் கொண்டு வரும் முயற்சியாக அன்றைய சிங்கள இளைஞர்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்டது. அன்றைய முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள் எஸ். ஏ. விக்கிரமசிங்க, என். எம். பெரேரா, பிலிப் குணவர்தன ஆகியோர் ஆவர்.[1] 1940களில் நாட்டின் முக்கிய அரசியல் சக்தியாக உருவானது. 1964 ஆம் ஆண்டின் அரசாங்கத்தில் கூட்டணிக் கட்சியாக இது இருந்தது. இது பின்னர் நான்காம் அனைத்துலகத்தில் இருந்து நீக்கப்பட்டது. 1970களில் இது இலங்கை அரசியலில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தது. பின்னர் அடுத்த 30 ஆண்டுகளில் இக்கட்சியின் செல்வாக்குச் சரியத் தொடங்கியது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia