ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (United People's Freedom Alliance, சிங்களம்: එක්සත් ජනතා නිදහස් සන්ධානය) என்பது இலங்கையின் ஓர் அரசியல் கூட்டணி ஆகும். 2004 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இக்கூட்டணியின் கடைசி தலைவர் மைத்திரிபால சிறிசேன, செயலாளர் விஸ்வா வற்ணபால[1][2] இது பின்வரும் கட்சிகளினால் உருவாக்கப்பட்டது:
வரலாறுகூட்டணியின் முக்கிய கட்சி இலங்கை சுதந்திரக் கட்சியாகும். எனினும் 2005 சனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு.மு.வின் வேட்பாளரான மகிந்த ராஜபக்சவை ஆதரித்தது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை சமசமாஜக் கட்சி என்பன ஐ.ம.சு.மு.வுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் தேர்தல்களில் ஒன்றாக போட்டியிட்டன. 2004 ஏப்ரல் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி 45.6% வாக்குகளைப் பெற்று மொத்தமுள்ள 225 இடங்களில் 105 இடங்களைக் கைப்பற்றியது.[3] ஏப்ரல் 2005 இல் இரண்டாம் நிலை அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டது. இதனை அடுத்து அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. 2005 அரசுத்தலைவர் தேர்தலில், இக்கூட்டணியின் வேட்பாளர் மகிந்த ராசபக்ச 50.29% வாக்குகளைப் பெற்று அரசுத்தலைவர் ஆனார். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் இத்தேர்தலில் வாக்களிக்காமல் ஒன்றியொதுக்கல் செய்தனர். 2010 அரசுத்தலைவர் தேர்தலிலும் மகிந்த ராசபக்ச 57.88% வாக்குகளைப் பெற்று இரண்டாம் முறையாக அரசுத்தலைவர் ஆனார்.[4] 2015 அரச தலைவர் தேர்தலில் இக் கூட்டணியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ச பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவிடம் தோற்றார். 2015 இல் மைத்திரி பால சிறிசேன தலைவரானார். 2018:உள்ளாட்சி தேர்தலில் இக் கூட்டணி படு தோல்வி அடைந்தது.2019 இல் கலைக்கப்பட்டு பிரதான கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இலங்கை பொதுசன முன்னணியுடன் இனைந்தது கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia