லதா மங்கேஷ்கர் விருதுலதா மங்கேஷ்கர் விருது (Lata Mangeshkar Award) என்பது இசைத் துறையில் படைப்புகளைக் கவுரவிப்பதற்காக நிறுவப்பட்ட ஒரு தேசிய அளவிலான விருதாகும். இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகள் லதா மங்கேஷ்கர் பெயரில் விருதுகளை வழங்குகின்றன. மத்தியப் பிரதேச மாநில அரசு இந்த விருதை 1984ஆம் ஆண்டில் தொடங்கியது.[1] இந்த விருது தகுதிச் சான்றிதழும் ரொக்கப் பரிசினையும் கொண்டுள்ளது. 1992 முதல் மகாராட்டிர அரசால் வழங்கப்படும் லதா மங்கேஷ்கர் விருதும் உள்ளது. இது அதிகாரப்பூர்வமாக "வாழ்நாள் சாதனைக்கான லதா மங்கேஷ்கர் விருது" என்றும் அழைக்கப்படுகிறது. மற்றொரு விருது ஆந்திரப் பிரதேச அரசால் வழங்கப்படுகிறது. விருதுபெற்றோர்லதா மங்கேஷ்கர் விருது பெற்றவர்கள் பின்வருமாறு: லதா தீனநாத் மங்கேஷ்கரின் குடும்பம்மங்கேஷ்கர் குடும்பமும் தீனநாத் மங்கேஷ்கர் சுமிருதி பிரதிசுடான் தொண்டு அறக்கட்டளையும் 2022ஆம் ஆண்டு முதல், பல உறுப்பு செயலிழப்பைத் தொடர்ந்து பிப்ரவரி 2022இல் காலமான லதா மங்கேஷ்கரின் நினைவாக இந்த விருதை நிறுவ முடிவு செய்தன. அப்போது லதா மங்கேஷ்கருக்கு வயது 92.
மத்தியப் பிரதேச அரசு
மகாராட்டிர அரசுமகாராட்டிர அரசால் வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளருக்கான லதா மங்கேஷ்கர் விருது, ₹ 5,00,000 ரொக்கப் பரிசு, பாராட்டுப் பத்திரம், கேடயம், சால்வை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[10]
ஆந்திரப் பிரதேச அரசு
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia