லத்திகா சரண்
லத்திகா சரண் (Letika Saran), என்பவர் இந்தியா, தமிழ்நாடு, முன்னாள் காவல்துறை இயக்குநர் ஆவார். இவர் முன்னதாக சென்னையின் 36வது காவல்துறை ஆணையராகப் பணியாற்றினார். இந்தியாவில் பெருநகர காவல் அமைப்பின் தலைவராக இருந்த முதல் பெண் இவர்தான். இதற்கு முன் இவர் கூடுதல் காவல் துறை இயக்குநராக (ஏடிஜிபி) பணியாற்றினார்.[1][2] ஆரம்ப கால வாழ்க்கைசரண், 1952ஆம் ஆண்டு மார்ச் 31 அன்று கேரள மாநிலம் இடுக்கியில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் என். எஸ். தார். இவர் ஜேம்ஸ் பின்லே குழுமத்தில் முதல் தோட்டக்காரராக இருந்தார். இக்குழுமம் பின்னர் அது டாடா தேயிலை நிறுவனமாக மாறியது. இவரது தாயார் பெயர் விஜயலட்சுமி தார். சரண் 1976ஆம் ஆண்டில் இந்தியக் காவல் பணி அலுவலராகத் தமிழகத்தில் பணியில் சேர்ந்தார். காவல் துறையில் முதலில் அனுமதிக்கப்பட்ட இரு பெண்களில் லத்திகா சரண் ஒருவர், மற்றவர் திலகவதி ஆவார்.[3] பணிலத்திகா சரண் கூடுதல் காவல்துறை இயக்குநர் (பயிற்சி மற்றும் திட்ட இயக்குநர்), தமிழ்நாடு காவல் பயிற்சி பள்ளி, இயக்குநர், புலனாய்வு மற்றும் லஞ்ச ஒழிப்பு இயக்குநராகவும், சென்னை பெருநகர காவல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 2010 சனவரி 8 அன்று, தமிழ்நாட்டின் காவல்துறையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் இரண்டாவது பெண் காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் தமிழகத்தின் முதல் பெண் அதிகாரி என்ற பெருமை பெற்றார். சரணின் நியமனத்தினை எதிர்த்து மற்றொரு இ.கா.ப. அதிகாரியும் அப்பொழுது தீயணைப்புத்துறை இயக்குநருமான நடராஜ் தமிழ்நாடு தீர்ப்பாயத்தில் வழக்குத்தொடுத்தார்.[4] பணிமூப்பு அடிப்படையில் தனக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். இதனால் 2010 அக்டோபரில் சென்னை உயர்நீதிமன்றம் சரணின் நியமனத்தை ரத்து செய்தது. மூன்று தகுதியான அதிகாரிகளின் பட்டியலைத் தயார் செய்து அதிலிருந்து ஒருவரை மாநில அரசு தேர்வு செய்ய உத்தரவிட்டது.[5] மாநில அரசு, "உரியப் பரிசீலனைக்குப் பிறகு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின் படி” சரணை மீண்டும் பட்டியலிலிருந்து தேர்வு செய்தது. மீண்டும் லத்திகா சரண் 2010 நவம்பர் 27ஆம் நாள் பதவியேற்றார்.[6] சரண் ஏப்ரல் 2012இல் ஓய்வு பெற்றார்.[3] ஓய்வுக்குப் பின்காவல்துறை பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சரண் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் தனது ஓய்வு நேரத்தைச் செலவிடுகிறார். இவர் பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்புணர்வு வகுப்புகளை எடுத்து சாலை பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார். இவர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். பிரமாண்ட போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றைத் தொடங்கி நடத்தினார்.[7] 2015 ஆகஸ்ட் 9 அன்று, சென்னை முழுவதும் 100 போக்குவரத்து சைகள் முன்பு “தோழன்” என்ற அரசு சாரா விழிப்புணர்வினை ஏற்பாடு செய்தார்.[8] இதன் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உருவாக்குவதாகும். குடிமக்கள் சட்டத்தினை மதித்து நடக்கும் உயிர் காக்கும் சட்டம் (இந்தியா) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி[9] விபத்து இல்லாத தேசமாக நம் நாட்டை மாற்ற வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். இதற்காக இவர் தன்னார்வலர்களுடன் இணைந்து, பொதுமக்களுடன் உரையாடி, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தார்.[10] சாலை பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் பற்றி சரண் பொதுமக்களிடம் பேசினார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia