லலித் யாதவ் (டெல்லி துடுப்பாட்டக்காரர்)
லலித் யாதவ் (பிறப்பு 3 ஜனவரி 1997) ஒரு இந்திய துடுப்பாட்டக்காரர்.[1] இவர் 17 நவம்பர் 2017 அன்று 2017-18 ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக தனது முதல் தரப் போட்டிகளில் அறிமுகமானார்.[2] 9 ஜனவரி 2018 அன்று 2017-18 மண்டல டி20 லீக்கில் டெல்லி அணிக்காக இருபது20 போட்டிகளில் அறிமுகமானார் [3] . அவர் 2017-18 விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 15 பிப்ரவரி 2018 அன்று டெல்லிக்காக பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார் [4] . 2020 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு முன்னதாக 2020 ஐபிஎல் ஏலத்தில், இவர் டெல்லி கேப்பிடல் அணியால் வாங்கப்பட்டார்.[5] பிப்ரவரி 2022 இல், 2022 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் அவர் மீண்டும் டெல்லி கேப்பிட்டல்ஸால் வாங்கப்பட்டார்.[6] அதே மாதத்தின் பிற்பகுதியில், 2021-22 ரஞ்சி டிராபியில், யாதவ் தமிழ்நாடுக்கு எதிராக 177 ரன்கள் எடுத்து, முதல் தர துடுப்பாட்டத்தில் தனது முதல் நூறைப் பதிவு செய்தார்.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia