லாசா ஆறு (Lhasa River, also called Kyi Chu (Tibetan: སྐྱིད་ཆུ་, Wylie: sKyid chu, மரபுவழிச் சீனம்: 拉薩河; பின்யின்: Lāsà hé), சீனாவின் மேற்கே உள்ள திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் தெற்கில் அமைந்த லாசா மாவட்டத்தில் பாயும் ஆறு ஆகும்.[2] இது யார்லங் சாங்போ ஆற்றின்துணை ஆறு ஆகும். கோடைக் காலத்தில் லாசா ஆற்று நீர் வெள்ளத்துடன் பாய்ம். லாசா ஆற்றின் குறுக்கே இரண்டு புனல் மின் நிலையங்கள் கட்டப்பட்ட்டுள்ளது. லாசா ஆற்றின் வடிநிலப் பகுதி 32,471 சதுர கிலோமீட்டர்கள் (12,537 sq mi) பரப்பளவு கொண்டது.
லாசா ஆற்றின் வடிநிலப்பகுதி இமயமலையில் 4,500 மீட்டர்கள் (14,800 அடி) உயரத்தில் உள்ளது. இந்த ஆறு லாசா மாவட்டதின் பொருளாதாரம், பண்பாடு மற்றும் அரசியலுக்கு ஆதாரமாக உள்ளது. 1990-ஆம் ஆண்டின் கணக்குப் படி, லாசா ஆற்றின் வடிநிலப் பகுதியில் 3,29,700 மக்கள் தொகை கொண்டது. அதில் 88% வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். லாசா ஆற்றின் வடிநிலப் பகுதியின் தட்பவெப்பம் 1.2 முதல் 7.5 °C (34.2 முதல் 45.5 °F) ஆகவுள்ளது. ஆண்டு சராசரி மழைப்பொழிவு 466.3 மில்லிமீட்டர்கள் (18.36 அங்) உள்ளது. பருவ மழைக்காலமான சூன் முதல் செப்டம்பர் வரையில் 85% மழைப்பொழிவு உள்ளது. லாசா ஆறு 35,258 எக்டேர்கள் (87,120 ஏக்கர்கள்) பரப்பளவு விளைநிலத்திற்கு நீர் ஆதாரமாக உள்ளது.
"Джичу". Большая советская энциклопедия (Great Soviet Encyclopedia). (1978). Советская энциклопедия. அணுகப்பட்டது 2014-02-05.
"Джичу". Географическая энциклопедия (Geographical Encyclopedia). அணுகப்பட்டது 2015-02-05.
Harrer, Heinrich (1954). Sept ans d'aventures au Tibet (in French). Translated by Henry Daussy. Arthaud. ISBN2-7003-0427-6. {{cite book}}: Invalid |ref=harv (help)CS1 maint: unrecognized language (link)
Harrer, Heinrich (1997). Lhassa : le Tibet disparu (in French). text and photographs by Heinrich Harrer. Édition de La Martinière. {{cite book}}: Invalid |ref=harv (help)CS1 maint: unrecognized language (link)