லாசா மாவட்டம் அல்லது செங்க்குவான் மாவட்டம் (Lhasa or Chengguan) சீனாவின் மேற்கில், இந்தியாவின் வடகிழக்கில், சீனாவின் தன்னாட்சிப் பிரதேசங்களில் ஒன்றான திபெத் தன்னாட்சிப் பகுதியின் மக்கள் தொகை மிக்க மாவட்டம் ஆகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் லாசா நகரம் ஆகும்.[3]லாசா நகரம், கடவுளர்களின் இருப்பிடமாக திபெத்தியர்கள் கருதுகின்றனர். லாசா மாவட்டம் கிழக்கு இமயமலையில் 3,650 மீட்டர்கள் (11,980 அடி) உயரத்தில், 525 சதுர கிலோமீட்டர்கள் (203 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை ஆறான லாசா ஆறு பாய்கிறது.
திபெத்திய பீடபூமியில்சிஞ்சியாங் நகரத்திற்குப் பின அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக லாசா மாவட்டம் உள்ளது. கிபி 17-ஆம் நூற்றான்டிலிருந்து, லாசா மாவட்டத்தின் நிர்வாகத் தலமையிடமாகவும், ஆன்மிகத் தலைமையிடமாகவும் உள்ள லாசா நகரம் கடல் மட்டத்திலிருந்து 3,656 மீட்டர்கள் (11,990 அடி) உயரத்தில் உள்ளது. லாசா நகரம் உலகில் உயரமான இடத்தில் அமைந்த நகரங்களில் ஒன்றாக உள்ளது. லாசா மாவட்டத்தில் திபெத்திய பௌத்தம் பெரும்பான்மை சமயமாக உள்ளது. இம்மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க இடங்கள் பொட்டலா அரண்மனை, ஜோகாங் விகாரை மற்றும் நோர்புலிங்கா அரண்மனைகள் ஆகும்.
லாசா மாவட்டத்தில் திபெத்திய பல்கலைக்கழகம் உள்ளது.[4]525 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட லாசா மாவட்டத்தின், 2010-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 2,79,074 ஆகவுள்ளது. இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக திபெத்தியர்களுடன்ஹான் சீனர்கள் மற்றும் ஊய் மக்கள் வாழ்கின்றனர். மேலும் இங்கு திபெத்திய மொழி மற்றும் சீனர்களின் மாண்டரின் மொழி பேசப்படுகிறது.
புவியியல்
திபெத்திய பீடபூமியில் லாசா மாவட்டம் கிழக்கு இமயமலையில் 3,650 மீட்டர்கள் (11,980 அடி) உயரத்தில், 525 சதுர கிலோமீட்டர்கள் (203 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை ஆறான லாசா ஆறு பாய்கிறது. கடவுளர்களின் இருப்பிடமாக திபெத்தியர்கள் லாசா நகரத்தை கருதுகின்றனர்.
லாசா மாவட்ட நிர்வாகம்
லாசா மாவட்டம் 12 துணை-மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
தட்ப வெப்பம்
தட்பவெப்ப நிலைத் தகவல், Lhasa (1971−2000 normals, extremes 1951−2016)
Dowman, Keith. 1988. The Power-Places of Central Tibet: The Pilgrim's Guide, p. 59. Routledge & Kegan Paul. London. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-7102-1370-0 (ppk).
Forbes, Andrew; Henley, David (2011). China's Ancient Tea Horse Road. Chiang Mai: Cognoscenti Books. ASIN: B005DQV7Q2
Miles, Paul. (April 9, 2005). "Tourism drive 'is destroying Tibet' Unesco fears for Lhasa's World Heritage sites as the Chinese try to pull in 10 million visitors a year by 2020". Daily Telegraph (London), p. 4.
Pelliot, Paul. (1961) Histoire ancienne du Tibet. Libraire d'Amérique et d'orient. Paris.
von Schroeder, Ulrich. (1981). Indo-Tibetan Bronzes. (608 pages, 1244 illustrations). Hong Kong: Visual Dharma Publications Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்962-7049-01-8
von Schroeder, Ulrich. (2001). Buddhist Sculptures in Tibet. Vol. One: India & Nepal; Vol. Two: Tibet & China. (Volume One: 655 pages with 766 illustrations; Volume Two: 675 pages with 987 illustrations). Hong Kong: Visual Dharma Publications, Ltd.). பன்னாட்டுத் தரப்புத்தக எண்962-7049-07-7
von Schroeder, Ulrich. 2008. 108 Buddhist Statues in Tibet. (212 p., 112 colour illustrations) (DVD with 527 digital photographs). Chicago: Serindia Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்962-7049-08-5
மேலும் படிக்க
Desideri (1932). An Account of Tibet: The Travels of Ippolito Desideri 1712–1727. Ippolito Desideri. Edited by Filippo De Filippi. Introduction by C. Wessels. Reproduced by Rupa & Co, New Delhi. 2005