லாடனேந்தல்
லாடனேந்தல் என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், லாடனேந்தல் ஊராட்சியில், வைகை ஆற்றின் கரையில் அமைந்த வருவாய் கிராமம் ஆகும்.[1] இதன் அஞ்சல் சுட்டு எண் 630 611; தொலைபேசி குறியீடு எண் 04574 ஆகும். லாடனேந்தல், மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இதன் அஞ்சலகம் திருப்புவனத்தில் உள்ளது. இதன் அருகமைந்த சிற்றூர்கள்: பாப்பாக்குடி, மேலச்சொரிக்குளம், கீழசொரிக்குளம், தூதை, திருப்பாச்சேத்தி, கலியாந்தூர், அல்லிநகரம் ஓடாத்தூர், கானூர், பிரமனூர் ஆகும். அருகமைந்த நகரங்கள்:மதுரை, மானாமதுரை மற்றும் சிவகங்கை ஆகும். போக்குவரத்துமதுரை - இராமேஸ்வரம தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த லாடனேந்தல் கிராமம், மதுரையிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும், சிவகங்கையிலிருந்து 24 கி.மீ. தொலைவிலும், திருப்புவனத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மதுரையிலிருந்து, திருப்புவனம் வழியாக லாடனேந்தலுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையங்கள், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, மதுரை மற்றும் சிவகங்கை ஆகும். மக்கள்தொகை பரம்பல்2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, லாடனேந்தல் சிற்றூரின் மொத்த மக்கள்தொகை 4,289 ஆகும். அதில் ஒடுக்கப்பட்டோர் 307 (7.2%) ஆக உள்ளனர். பாலின விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு 881 வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 80.35% ஆக உள்ளது. ஆறு வயதிற்குட்டபட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 453 ஆகும்.[2] வங்கிகள்
வழிபாட்டுத் தலங்கள்
கல்வி நிலையங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia