லாப்ரடோர்
லாப்ரடோர் (Labrador) கனடாவின் நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் மாகாணத்தின் வட பகுதியில் அமைந்துள்ள மண்டலமாகும். இம்மாகாணத்தின் பெருநிலப் பகுதியில் அமைந்துள்ள லாப்ரடோர், நியூபவுண்ட்லாந்திடமிருந்து பெல் ஐல் நீரிணையால் பிரிக்கப்பட்டுள்ளது. அத்திலாந்திக்கு கனடாவின் வடகோடியில் அமைந்துள்ள பெரிய புவியியல் பகுதியாகவும் விளங்குகின்றது. லாப்ரடோர் மூவலந்தீவின் கிழக்குப் பகுதியில் லாப்ரடோர் அமைந்துள்ளது. இதன் மேற்கிலும் தெற்கிலும் கியூபெக் மாகாணம் உள்ளது. கனடியப் பகுதியான நூனவுட்டுடன் கில்லினிக் தீவு மூலமாக சிறு எல்லையைப் பகிர்ந்துள்ளது. லாப்ரடோரின் பரப்பளவு நியூபவுண்ட்லாந்து தீவின் பரப்பை விட இருமடங்காக இருந்தபோதிலும் இங்கு மாகாணத்தின் 8% மக்களே வசிக்கின்றனர். லாப்ரடோரின் முதற்குடி மக்களாக வடக்கு இனுவிட்டுகளும் தெற்கு இனுவிட்டு-மெடிசுகளும் இன்னு இனத்தவரும் உள்ளனர். 1940களிலும் 1950களிலும் இங்குள்ள இயற்கை வளங்கள் அறியப்படும்வரை முதற்குடி அல்லாதவர்கள் லாப்ரடோரில் தங்கி வாழ்ந்ததில்லை. மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்![]() விக்கிப்பயணத்தில் Labrador என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
|
Portal di Ensiklopedia Dunia