லால் சலாம் (2024 திரைப்படம்)
லால் சலாம் ( டal Salaam) என்பது ஐசுவர்யா ரசினிகாந்த் இயக்கத்தில லைகா புரொடக்ஷன்ஸின் கீழ் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிப்பில 2024 இல் வெளிவந்த இந்திய தமிழ் மொழி விளையாட்டு அதிரடி திரைப்படமாகும். இப்படத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே. எஸ். ரவிக்குமார், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படம் நவம்பர் 2022 இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி மார்ச் 2023 இல் தொடங்கியது. சென்னை, மும்பை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, ஆகஸ்ட் 2023 தொடக்கத்தில் முடிக்கப்பட்டது. ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். லால் சலாம் 9 பிப்ரவரி 2024 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[4] படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இசை.ஐசுவர்யா ரசினிகாந்த் இயக்கியிருக்கும் திரைப்படத்தில் ஏ.ஆர் ரகுமான் முதன்முதலில் இசையமைத்துள்ளார்.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia