லியுதேத்தியம் பாசுபைடு
லியுதேத்தியம் பாசுபைடு (Lutetium phosphide) என்பது LuP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[3][4] லியுத்தேத்தியமும் பாசுபரசும் சேர்ந்து வினைபுரிந்து லியுத்தேத்தியம் பாசுபைடு உருவாகிறது. கருப்பு நிறப் படிகங்களாக உருவாகும் இது தண்ணீரில் கரையாது. தயாரிப்புலியுத்தேத்தியத்தை சிவப்பு பாசுபரசுடன் சேர்த்து மந்த வாயுச் சூழலில் சூடுபடுத்தினால் லியுத்தேத்தியம் பாசுபைடு உருவாகிறது. லியுத்தேத்தியத்தை பாசுபீனுடன் சேர்த்து வினைப்படுத்தினாலும் இச்சேர்மம் உருவாகிறது. இயற்பியல் பண்புகள்F m3m என்ற இடக்குழுவில் a = 0.5533 nm, Z = 4 என்ற அலகுக் கூடுகளுடன் கருப்பு நிறத்தில் கனசதுரப் படிகங்களாக லியுத்தேத்தியம் பாசுபைடு உருவாகிறது.[5] காற்றில் நிலைப்புத்தன்மையுடன் உள்ளது. தண்ணீரில் கரையாது. நைட்ரிக் அமிலத்துடன் தீவிரமாக வினைபுரிகிறது. பயன்கள்சீரொளி இருமுனையங்களில், உயர் அலைவரிசை பயன்பாடுகளில், உயர் மின்னளவுகளில் இது குறைக்கடத்தியாகப் பயன்படுகிறது.[6] கதிர்வீச்சை உறிஞ்சும் திறன் காரணமாக காமா கதிர்வீச்சு கண்டறியும் கருவிகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia