லூவா
லூவா (Lua, /ˈluːə/ LOO-ə, Portuguese: lua [ˈlu.(w)ɐ] "நிலா" எனப் பொருள்படும்) என்பது முதன்மை நோக்கமாக விரிவுபடுத்தக்கூடிய ஆணைச்சொற்களுடன் கூடிய படிவ நிரலாக்க மொழியாக வடிவமைக்கப்பட்ட இலகுவான பல்திறப்பட்ட-கருத்தோட்ட நிரல் மொழி ஆகும். இது ஐஎஸ்ஓ சியில் எழுதப்பட்டுள்ளதால் அனைத்து இயக்குத்தளங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.[1] பிற படிவ நிரலாக்க மொழிகளை விட லூவா எளிமையான சி பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தைக் கொண்டுள்ளது. இந்த நிரல்மொழி 1993 இல் இராபர்டோ லெருசலிம்க்கி, லூயி என்ரிக் டெ பிகுய்ரிடோ மற்றும் வால்டெமர் செலசால் உருவாக்கப்பட்டது.[2] லூவா பல பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது; வேர்ல்டு ஆப் வார்கிராஃப்ட் போன்ற பெரும்பான்மையான நிகழ்பட ஆட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. [3] சூன் 2010இல், ஆப்பிள் நிறுவனம் லூவாவை பயன்படுத்துவதற்காக தனது ஐஓஎசு இயக்குதளத்திற்கான மென்பொருள் மேம்படுத்தல் பொதியை பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை மாற்றியது.[4] இதனால் ஆங்க்ரி பேர்ட்சு போன்ற ஐ-போன் பயன்பாடுகள் உருவாக்கப்பட வழிவகுத்தது. சூன் 2011இல் லூவா நிரலாக்க மொழிகளில் மிகவும் பரவலான மொழிகளில் பத்தாவது இடத்தில் இருந்தது.[5] எடுத்துக்காட்டு
#!/usr/bin/lua
print("வருக வையகமே!")
#!/usr/bin/lua
a = "வருக வையகமே!"
print(a)
#!/usr/bin/lua
--நிரலிடைக் குறிப்பு
#!/usr/bin/lua
--[[
நிரலிடைக் குறிப்பு
நிரலிடைக் குறிப்பு
நிரலிடைக் குறிப்பு
]]
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்![]() விக்கிநூல்களில் மேலதிக மேலதிகவிவரங்களுள்ளன: Lua Functional Programming
|
Portal di Ensiklopedia Dunia