லேனா செட்டியார்
லேனா செட்டியார் (Lena Chettiar) (எஸ்.எம். லெட்சுமன் செட்டியார்) செட்டிநாட்டிலிருந்து வந்த ஒரு இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர். இவர் தமிழ்த் திரைப்படை துறையில் தனது படைப்புகளுக்காகப் பெயர் பெற்றவர்.[2] தொழில்எஸ். எம். லெட்சுமன் செட்டியார் செட்டிநாட்டில் உள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார் குலத்தைச் சேர்ந்தவர்.[3] தனது வாழ்க்கையின் ஆரம்பத்தில், லேனா தென் தமிழ் பகுதிகளில் நாடகங்களை நடத்துவதில் பெயர் பெற்றவர். மேலும் இவர் பயன்படுத்தப்பட்ட வாகன வியாபாரி ஆவார். இவர் தமிழில் வாகனங்ளைப் பற்றி துண்டுச்சீட்டுகளை வெளியிட்ட முதல் நபராவார். மேடை நடிகர் எம்.கே. தியாகராஜா பாகவதரை திரைப்படங்கள் தயாரிக்க அறிவுறுத்தினார். பாகவதரின் முதல் படம் பவளக்கொடி, இந்தியாவின் தமிழ் பேசும் பகுதிகளிலும், இலங்கையிலும் நன்றாக ஓடியது.[4] இத்திரைப்படம் லேனாவினை திரைப்பட தயாரிப்பாளராக அறிமுகம் செய்தது. பவளக்கொடி வெளியான உடனேயே, லேனா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கிருஷ்ணா பிக்சர்ஸ் நிறுவனத்தினை தொடங்கினார். இந்நிறுவனமே பி. கண்ணம்பாவினை தமிழுக்கு அறிமுகம் செய்தது.[5] திரைப்படவியல்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia