கிருஷ்ணன் தூது (Krishnan Thoothu) அல்லது ஸ்ரீ கிருஷ்ணன் தூது (Sri Krishnan Thoothu) 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, என். எஸ். கிருஷ்ணன், பி. கண்ணாம்மா, டி. ஏ. மதுரம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]
இத்திரைப்படத்துடன் கொழுக்கட்டை குப்பு என்ற தலைப்பில் ஒரு நகைச்சுவைக் குறும்படமும் காண்பிக்கப்பட்டது.[3]
திரைக்கதை
இத்திரைப்படத்தின் கதையானது கிருஷ்ணன் (செருகுளத்தூர் சாமா) பாண்டவர்களுக்கான நீதியை கௌரவ மன்னன் துரியோதனனிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் பணியை மேற்கொண்ட வரலாற்றை பற்றியது. கதாநாயகியாக அறிமுக நடிகை பி. கண்ணாம்பா நடித்தார். இவரும் செருகுளத்தூர் சாமாவும் என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் ஆகியோரின் நகைச்சுவைக் குறும்படத்திற்கு பங்களித்தனர்.
நடிகர்கள்
நடிக, நடிகையரின் பட்டியல் பிலிம் நியூஸ் ஆனந்தன் இடமிருந்தும்,[3] படத்தின் பாட்டுப் புத்தகத்தில் இருந்தும்[1] பெறப்பட்டது.
இவர்களுடன், எம். ஆர். கனகரத்தினம், எம். ஆர். ராமலட்சுமி, புஷ்பம்மாள், ராஜீவி, பட்டு, சுலோசனா, லட்சுமிகாந்தம், சங்கரி, பத்மாவதி ஆகியோரும் நடித்தனர்.
- நடனம்: தனபாக்கியம், ஜானகிபாய்
- குழந்தைகள் நடனம்: பேபி ரங்கா, சுலோசனா
கொளுக்கட்டை குப்பு நடிகர்கள்
பாடல்கள்
படத்தில் இசையமைப்பாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை, ஆனால் பாடல் வரிகளை பாபநாசம் சிவனும், ராஜகோபால ஐயரும் எழுதினர். பாடல்களை ஜோதிசு சின்கா பதிவு செய்தார். மொத்தம் 24 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றை விட கொளுக்கட்டை குப்பு நாடகத்தில் 2 நகைச்சுவைப் பாடல்கள் இடம்பெற்றன.[1]
பாடல்கள்
எண். |
பாடல் |
பாடியோர் |
பாத்திரங்கள் |
இராகம்/தாளம்
|
1 |
ஸ்ரீ மாதவனே மழை நிறத்தவனே |
குழுவினர் |
- |
மோகன்கல்யாணி-ஆதி
|
2 |
இணையேயில்லாத எங்கள் இடையர் குலம் |
சிறுகளத்தூர் சாமா |
கிருட்டிணன் |
இந்துத்தான் பயாக்-ஏகம்
|
3 |
அன்புடைய தோழிமாரே, ஆடுவோமின்னேரம் |
எம். என். விஜயாள் |
சத்தியபாமா, தோழிகள் |
இந்துத்தானி சாரங்கா-ஆதி
|
4 |
பரிகாசமேனோ மாயா |
எம். என். விஜயாள் |
பாமா |
இந்துத்தானி பகார்-ஆதி
|
5 |
பிரேம சுபாவிக பந்தமதுலகே |
சிறுகளத்தூர் சாமா, எம். என். விஜயாள் |
கிருட்டிணன், பாமா |
பயாக்-ஆதி
|
6 |
அம்பா துளசி தாயே |
டி. எஸ். கிருஷ்ணவேணி |
ருக்மணி |
இந்துத்தானி கமாசு-ஆதி
|
7 |
தருமமிதுவே நாதா |
பி. கண்ணாம்பா |
திரௌபதி |
இந்த்துத்தான்-ஆதி
|
8 |
எனை நிகர்பவரினி யாரே இலரே |
விசலூர் சுப்பிரமணிய பாகவதர் |
துரியோதனன் |
மோகனம்-ஆதி
|
9 |
தாரணி வாழ்வது தாரக மாமா |
எல். நாராயண சோமயாஜலு |
சஞ்சயன் |
கானடா-ஆதி
|
10 |
நீ பாரத வமரில் யாவரையு நீராக்கி |
கொத்தமங்கலம் ராமசாமி |
சகாதேவன் |
செஞ்சுருட்டி
|
11 |
நீதியிதோ இனி நீர் சமாதானம் |
பி. கண்ணாம்பா, சிறுகளத்தூர் சாமா |
திரௌபதி, கிருட்டிணன் |
இந்துத்தானி பகடி கமாசு-ஆதி
|
12 |
சலேத்தி ஹிமவான் சைல: |
சிறுகளத்தூர் சாமா |
கிருட்டிணன் |
சுலோகம்-எதுகுலகாம்போதி
|
13 |
ஹே கோபாலக! ஹே க்ருபா ஜலநிதே |
நாகைநல்லூர் இலட்சுமிநாராயண பாகவதர் |
விதுரர் |
சுலோகம்-நாதநாமக்ரியை
|
14 |
ஒருமகர்க் காகக்கோடி யுறுதவமியற்று வாரே |
சிறுகளத்தூர் சாமா |
கிருட்டிணன் |
விருத்தம்-காம்போதி
|
15 |
கபட நாடக மாயவதாரீ |
எம். ஆர். வாசுவாம்பாள், சிறுகளத்தூர் சாமா |
குந்தி, கிருட்டிணன் |
மிசுரமல்லார்-ஆதி
|
16 |
கன்னியாயிருந்த நாளில் கடுகி துர்வாசர் வந்து |
எம். ஆர். வாசுவாம்பாள் |
குந்தி |
விருத்தம்-கேதாரகௌளம்
|
17 |
தம்பியரைந்து பேரும் தனித்தனி ஏவல் செய்ய |
எம். ஆர். வாசுவாம்பாள் |
குந்தி |
விருத்தம்
|
18 |
ஜெகஜ்ஜோதி ரூபதேவா வா தினமாமணியே |
எம். ஆர். வாசுவாம்பாள் |
குந்தி |
பகடி-ஆதி
|
19 |
மடந்தை பொற்றிருமேகலை மணியுகவே |
சாண்டோ நடேசபிள்ளை |
கர்ணன் |
விருத்தம்
|
20 |
கல்லினுங்கடிய நெஞ்சக்கசட |
நாகைநல்லூர் இலட்சுமிநாராயண பாகவதர் |
விதுரர் |
விருத்தம்-சிம்மேந்திரமத்யம்
|
21 |
ஓ கண்ணா கண்ணிலையோ |
எடுத்துக்காட்டு |
திரௌபதி |
அசாவேரி
|
22 |
தாயவள் உரலில் அன்று தயிர் கடைக் கயிற்றால் கட்ட |
சிறுகளத்தூர் சாமா |
கிருட்டிணன் |
மோகனம்
|
23 |
உலகமெல்லாம் அருளாலே |
பி. கண்ணாம்பா |
திரௌபதி |
ஆஷா-ஆதி
|
24 |
யமுனா விகார வாசுதேவா |
பி. ஜி. வெங்கடேசன் |
நாரதர் |
பகாடி
|
25 |
கொஞ்சம் வாங்கி தின்னு பாருங்கோ |
ஈ. கிருஷ்ணமூர்த்தி |
கொளுக்கட்டை குப்பு |
நகைச்சுவைப் பாடல்
|
26 |
இப்போ நான் செய்த தந்திரம் ரொம்பசரி |
என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் |
அருணாசலம், சுப்புத்தாய் |
நகைச்சுவைப் பாடல்
|
வரவேற்பு
இந்தத் திரைப்படத்தை ஆர். பிரகாஷ் சிறப்பாக இயக்கியிருந்தாலும், அறிமுக நாயகி பி. கண்ணாம்பாவின் மோசமான தமிழ் உச்சரிப்பு பெரும் குறையாக இருந்தது. அவருக்குத் தமிழ் தெரியாது, தெலுங்கு வழக்கில் பேசியது தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை.[2]
மேற்கோள்கள்