லொக்கி பெர்கசன்
லொக்கி பெர்கசன் (Lockie Ferguson, பிறப்பு: 13 சூன் 1991) நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் நியூசிலாந்து தேசிய அணிக்காகவும், ஓக்லாந்து துடுப்பாட்ட அணிக்காக முதல்தர துடுப்பாட்டத்திலும் விளையாடி வருகிறார்.[1] இருபது20 போட்டிகளில்2017 பெப்ரவரியில், 2017 இந்திய பிரிமியர் போட்டிகளில் விளையாடுவதற்காக ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு அணி இவரை 50 இலட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கியது.[2] 2018 திசம்பரில், 2019 இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.[3][4] பன்னாட்டுப் போட்டிகளில்2016 நவம்பரில், ஆத்திரேலிய அணிக்கெதிரான போட்டிகளில் விளையாட நியூசிலாந்தின் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார்.[5] 2016 திசம்பர் 4 இல் முதல் தடவையாக ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[6] 2017 சனவரி 3 இல் முதல் தடவையாக பன்னாட்டு இருபது20 போட்டியில் வங்காலதேச அணிக்கு எதிராக விளையாடினார்.[7] முதலாவது ஆட்டத்தில் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு இலக்குகளைக் கைப்பற்றினார்.[8] 2017 நவம்பரில், நியூசிலாந்தின் தேர்வு அணிக்காக சேர்க்கப்பட்டார்.[9] 2019 ஏப்ரலில், 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண அணியில் சேர்க்கப்பட்டார்.[10][11] 2019 சூன் 5 இல், வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில், பெர்கசன் தனது 50-வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[12] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia