முதல் முழு நீளத் திரைப்படமானமாநகரத்தை முடித்ததிலிருந்தே லோகேஷ் கனகராஜ் பகிரப்பட்ட திரைப்படங்களின் அண்டத்தைப் படைத்து அதன் உலகை விரிவாக்க வேண்டும் என்றும் இதுபோன்ற செயல்திட்டங்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கும் என்றும் கூறினார். கைதியின் தயாரிப்பின்போது அந்த யோசனையைப் புத்தாய பல திறந்த முனைக் கதைக்களங்களுடன் சோதித்துப் பின்பு அதனை உடைமைகளை உடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் ஆகியவற்றுடன் ஒருங்கே பணிபுரிந்து விக்ரம் திரைப்படத்தில் இணைத்தார். இத்தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களே பகிரப்பட்ட அண்டத்தை நிறுவி கைதி 2 மற்றும் விக்ரம் 2 உட்பட வருங்காலத்தில் வெளியாகும் பற்பல செயல்திட்டங்களை அறிவித்துள்ளன. இவையே லோகேஷ் திரையுலக அண்டம் என்று அதிகாரப்பூர்வமாக நன்றிக்கடன் ஏற்கும்.[9][10][11][2]
திரைப்படங்கள்
திரைப்படம்
வெளியீட்டு தேதி
இயக்குநர்
திரைக்கதையாசிரியர்(கள்)
தயாரிப்பாளர்(கள்)
கைதி
25 அக்டோபர் 2019
லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் மற்றும் பார்த்திபன்
எஸ். ஆர். பிரகாஷ்பாபு, எஸ். ஆர். பிரபு மற்றும் திருப்பூர் விவேக்
பின்தொடர்ச்சி அறிவிக்கப்பட்டது மற்றும் கார்த்தி அவரது கதாப்பாத்திரம் 'டில்லி'யாகத் தொடர்ந்து நடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.[10][12][13]
விக்ரம் 2
விக்ரமின் உச்சக்கட்ட காட்சிக்குப் பிறகு சூரியாவை 'ரோலெக்ஸ்'ஆக அறிமுகப்படுத்தி பின்தொடர்ச்சி அறிவிக்கப்பட்டது.[14][15][16]
நடிகர்களும் கதாப்பாத்திரங்களும்
பட்டியல் குறிசுட்டி(கள்)
இப்பிரிவு லோகேஷ் திரையுலக அண்டத்தில் தோன்றிய மற்றும் தோன்றவிருக்கும் கதாப்பாத்திரங்களைக் காட்டுகிறது.
காலியான கரு சாம்பல்நிற கட்டமானது கதாப்பாத்திரம் திரைப்படத்தில் இல்லை (அ) அக்கதாப்பாத்திரத்தின் அதிகாரப்பூர்வ இருப்பு உறுதிபடுத்தப்படவில்லை என்பதைக் குறிக்கிறது.