லோதயிர் பளிங்கு
லோதயிர் பளிங்கு என்பது, கிபி 855-869 காலப்பகுதியைச் சேர்ந்த படங்கள் பொறிக்கப்பட்ட இரத்தினம் ஆகும். வடமேற்கு ஐரோப்பாவில் உள்ள லோதாரிங்கியாவில் இருந்து கிடைத்த இதில், விவிலியத்தில் உள்ள சுசானாவின் கதை படங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளது.[1] இதை லோதர் பளிங்கு அல்லது சுசானா பளிங்கு என்றும் அழைப்பது உண்டு. இது இப்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் உள்ளது. விபரங்கள்இதன் முதன்மையான கூறு 4 அங்குல (10 சமீ) விட்டம் கொண்ட வட்டத் தட்டு வடிவிலான தெளிவான குவார்ட்சு ஆகும். இதில், சுசானாவும் மூத்தோரும் என்ற கதையில் இருந்து எட்டுக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.[2] முதலில் சுசானா முறையற்ற உறவில் ஈடுபட்டதாகக் கூறி மூத்தோரால் குற்றஞ்சாட்டப்படுகிறாள். டானியல் தலையிட்டு மூத்தோரைக் கேள்விக்கு உள்ளாக்கி, அவர்களது சாட்சிகளைப் பொய்யென வெளிப்படுத்தியதுடன் தண்டனையும் வாங்கிக் கொடுக்கிறார். இறுதிக் காட்சியில் சுசானா குற்றமற்றவள் என்று அறிவிக்கப்படுகிறாள். காட்சிகளுடன் இலத்தீன் மொழியில் விவிலியத்தில் இருந்து வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.[1][3] மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும் |
Portal di Ensiklopedia Dunia