லோத்து![]() லோத்து (Lot; /lɒt/; எபிரேயம்: לוֹט, தற்கால Lot திபேரியம் Lôṭ ; "திரை" or "மூடுதல்"[1]) என்பவர் தொடக்க நூல் அதிகாரங்கள் 11–14, 19 என்பவற்றில் குறிக்கப்பட்டுள்ள ஒரு நபராவார். இவருடைய வாழ்க்கை பற்றி குறிப்பிடத்தக்க விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இவர் தன்னுடைய பெரியப்பாவாக ஆபிராமுடன் பயணித்தமை (ஆபிரகாம்), சொதோம் கொமோரா அழிவிலிருந்து தப்பியமை, அப்போது அவருடைய மனைவி உப்புச் சிலையாகியது, பிள்ளைகள் வேண்டும் என்பதற்காக தன் மகள்கள் மூலம் பாலுறவுக்குட்படுத்தப்பட்டது ஆகியனவாகும். கிறித்தவர்கள் இவரை கடவுளின் நீதியான மனிதனாக மதிக்கிறார்கள்.[2] விவிலியம் குறிப்பிட்டபடி, இயேசு கிறிஸ்து லோத்துவின் சந்ததியைச் சேர்ந்தவராகிறார். தாவீதின் பாட்டியாகிய ரூத் மோவாப்பிய இனத்தைச் சேர்ந்தவர். மோவாப்பியர் லோத்தின் மகள் மூலம் பிறந்த பிள்ளைகளின் வாரிசுகளாவர்.[3] குடும்ப மரம்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia