வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமி
வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமி (Bangladesh Jamaat-e-Islami, வங்காள மொழி: বাংলাদেশ জামায়াতে ইসলামী) வங்காளதேசத்திலுள்ள ஓர் இஸ்லாமிய அரசியல் கட்சி ஆகும். ஜமாத் எனச் சுருக்கமாக அழைக்கப்படும்.[1] இது வங்காளதேசத்தின் பெரிய இஸ்லாமியக் கட்சி ஆகும். [2][3] கட்சிக்குத் தடை2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1 ஆம் நாள் வங்காளதேச உச்ச நீதிமன்றம் இக்கட்சியை தடை செய்தது. இது செயல்படுவதற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும் அரசியல் தேர்தலில் போட்டியிடும் தகுதி இல்லை என்றும் தீர்ப்பளித்தது.[4][5][6][7] தடைக்கான காரணம்இக்கட்சியானது வங்காளதேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிவதை எதிர்த்தது. மேலும் இக்கட்சி பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தது.[8] மேலும் சிறுபான்மை இந்துகள் மீது தாக்குதல் நடத்தியது, இந்துப் பெண்களை கற்பழித்து, இந்துகளை இஸ்லாமியர்களாக மதம் மாற வற்புறுத்தியது.[9][10][11][12] இக்கட்சியினர் சிலர் மீது போர்க்குற்ற வழக்குகள் தொடரப்பட்டன. அரசியல் செயல்பாடுகள்
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia