வசீரிஸ்தான்![]() ![]() வசீரிஸ்தான் (Waziristan) (பஷ்தூ மற்றும் Urdu: وزیرستان, பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில், ஆப்கானித்தான் எல்லையை ஒட்டி அமைந்த பகுதியாகும். வசிரிஸ்தானின் பரப்பளவு 11,585 ச.கி.மீ. ஆகும். இது பெஷாவருக்கு தெற்கில் 364 கி.மீ. (226.2 மைல்) தொலைவிலும்; ஆப்கானித்தான் தலைநகர் காபூலுக்கு தெற்கில் 442 கி.மீ. (274.6 மைல்) தொலைவிலும் உள்ளது. வசீரிஸ்தானில் பஷ்தூ மொழி பேசும் இசுலாமிய பஷ்தூன் பழங்குடிகள் அதிகம் வாழ்கின்றனர். வசிரிஸ்தான் நிர்வாக வசதிக்காக தெற்கு வசீரிஸ்தான் மற்றும் வடக்கு வசீரிஸ்தான் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 2018-வரை வசீரிஸ்தான் பாகிஸ்தான் அரசின் நேரடி நிர்வாகத்தில் இருந்த பழங்குடிப் பகுதிகளில் இருந்தது. 2018 முதல் இப்பகுதி கைபர் பக்துன்வா மாகாணத்தின் கீழ் தெற்கு வசீரிஸ்தான் மற்றும் வடக்கு வசீரிஸ்தான் மாவட்டங்களாக உள்ளது.[1][2] 2017 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, வடக்கு வசீரிஸ்தான் மாவட்டத்தின் மக்கள்தொகை5,43,254[3]தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தின் மக்கள்தொகை 6,74,065 ஆகும்.[4].வசீரிஸ்தான் மலைப்பகுதிகளில் ஆப்கானித்தான் தலிபான்களின் தீவிரவாத செயல்களின் கூடாரமாக விளங்குவதை, கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேற்கோள்கள்
மேலும் படிக்க
பன்னாட்டுத் தர தொடர் எண் 2195-2787 (http://www.apsa.info/wp-content/uploads/2012/10/SSA-1.pdf பரணிடப்பட்டது 2015-09-07 at the வந்தவழி இயந்திரம்)
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia