வச்ரசத்துவர்

வஜ்ரம் மற்றும் மணியுடன் வஜ்ரசத்துவர்.

வச்ரசத்துவர் என்பது வஜ்ரயான பௌத்தத்தில் சமந்தபத்திரருடைய பெயர் ஆகும். வஜ்ரயான பௌத்தத்தில் பல புத்தர்களும் போதிசத்துவர்கள் வேறு வடிவில் வணங்கப்படுகின்றனர். வஜ்ரசத்துவர்,மஹாவைரோசன சூத்திரம் மற்றும் வஜ்ரசேகர சூத்திரத்தில் முக்கிய் பங்கு வகிக்கின்றார். இரண்டு சூத்திரங்களிலும், வஜ்ரசத்துவர் மஹாவைரோசன புத்தரிடமிருந்து தர்மத்தை தெரிந்து கொள்ளும் விதமாக பல்வேறு சடங்குகளை கற்கிறார். இதிலிருந்தே வஜ்ரயான பௌத்தம் பிறந்த்தாக கூறுவர்.

தந்திர பௌத்த சடங்குகளில், குரு மஹாவைரோசனராகவும் சீடர் வஜ்ரசத்துவராகவும் கருதிக்கொண்டு மேற்கூறிய சூத்த்ரங்களை மந்திரங்களாக உச்சாடனம் செய்வர்.

பௌத்த மறைபொருள்(esoteric) பிரிவை இவரே தோற்றுவித்ததாக கருதப்படுகிறது. வஜ்ரசத்துவர் நாகார்ஜுனருக்கு மறைபொருள் தந்திரத்தை தென்னிந்தியாவில் ஒரு ஸ்தூபியில் உபதேசித்ததாக கருதப்படுகிறது.

சில தந்திர பௌத்த பிரிவுகள், இவரை ஆதிபுத்தராக கருதிகின்றன

மந்திரங்கள்

இவருடைய மந்திரம் ஓம் வஜ்ரசத்த்வ ஹூம்(ॐ वज्रसत्त्व हूँ) எனபது ஆகும். மேலும் இவருக்கு 100 எழுத்துக்களை கொண்ட மந்திரமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்

  • Becoming Vajrasattva, 2nd Edition: The Tantric Path of Purification (2004) by Lama Yeshe, ISBN 978-0861713899, Wisdom Publications.
  • Teachings from the Vajrasattva Retreat (1999) by Lama Thubten Zopa, ISBN 978-1891868047, Lama Yeshe Wisdom Archive, downloadable
  • The Tantric Path of Purification: The Yoga Method of Heruka Vajrasattva (1994) by Lama Thubten Yeshe, ISBN 978-0861710201, Wisdom Publications.

வெளி இணைப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya