வச்ரபானி

வச்ரபானி மஹாயான பௌத்தத்தின் பழம்பெறும் போதிசத்துவர்களில் ஒருவர். அவருடைய பெயருக்கு கையில் மின்னலை(வஜ்ரம் - மின்னல்) ஏந்தியவர் என்று பொருள். இவர் புத்தரின் பாதுகாவலராக திகழ்கிறார் மேலும் அவர் புத்தரின் ஆற்றலில் உருவகமாக உள்ளார். வஜ்ரபாணி பழங்காலத்தில் பெரும்பாண்மையான பௌத்த வடிவங்களில் புத்தருடன் காணப்படுகிறார். பொதுவாக, வஜ்ரபாணி, அவலோகிதேஷ்வரர், மஞ்சுஸ்ரீ ஆகிய மூவரும் புத்தரின் பாதுகாவலர்களாக சித்தரிக்கப்படுபவர்கள்.

நம்பிக்கைகள்

காந்தார வஜ்ரபாணி சிலை

வஜ்ரபாணி, கையில் மின்னலை ஏந்தியவராக உள்ளார். எப்படி, மஞ்சுஸ்ரீ அனைத்து புத்தர்களின் அறிவின் உருவகமாகவும், அவலோகிதேஷ்வரர் அனைத்து புத்தர்களின் கருணையின் உருவமகாகவும் கருதுவது போல, வஜ்ரபாணி அனைத்து புத்தர்களின் ஆற்றலின் உருவகமாக விளங்குகிறார். வஜ்ரபாணியின் இந்த உக்கிர உருவம், தெளிவு பெற்ற மனத்தின் ஆற்றலை விளக்குகிறது. அவர் மனிதர்களுள் உள்ள எதிர்மறையான எண்ணங்களை அழிப்பவராக உள்ளார். அவருடைய இடது கையில் வஜ்ராயுதமும், வலது கையில் பாசமும்(पाशं) வைத்துள்ளார். தன்னிடமுள்ள பாசத்தால் அரக்கர்களை கட்டுகின்றார். தன்னுட்ய சிரத்தில் மண்டை ஓட்டை மகுடமாக சூடியுள்ளார். மேலும், கழுத்தில் நாகத்தையும் உடலில் புலித்தோலையும் அணிந்துள்ளார்.

சித்தரிப்பு

புத்தரின் பாதுகாவலராக வஜ்ரபாணி

பொதுவாக, வஜ்ரபாணி உக்கிர உருவுடன் காட்சி தருகிறார். மேலும் காந்தார பௌத்த சிற்பங்களில் இவர் கிரேக்க வீரரான ஹெராக்ல்ஸ்'ஐ ஒத்து இருக்கிறார். மேலும் புத்தரின் காவலராகவும் வழிகாட்டியாகவும் இச்சிற்பங்களில் அவர் சித்தரிக்கப்படுகிறார். ஜப்பானின் இவரை ஷுகொங்கோஷின் என அழைக்கின்றனர். புத்தர்களின் பாதுகாவலர்களாக கருதப்படும் வித்யாராஜாக்கள் இவ்ரை வணங்கும் வழக்கத்தில் இருந்து தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.

மந்திரங்கள்

வஜ்ரபாணியின் மந்திரம் கீழ்க்கண்டவாறு

ஓம் வஜ்ரபாணி ஹூம் ॐ वज्रपाणि हूँ

இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் அளவில்லாத ஆற்றலும் வீரியமும் ஒருவருக்கு கிடைப்பதாக நம்பப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya