வஜ்ரம் (2015 திரைப்படம்)
வஜ்ரம் 2015 இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை-நாடக படம் திரைப்படம் ஆகும். இப்படத்தை ரமேஷ் செல்வன் இயக்கினார். இத்திரைப்படம் ஊழல் மந்திரி மீது பழிவாங்க விரும்பும் நான்கு சிறுவர்களைச் சுற்றி படம் சுழல்கிறது. இதில் கிஷோர், ஸ்ரீ ராம், பாண்டி, குட்டிமானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், பாண்டி ரவி, ஜெயப்பிரகாசு, தம்பி ராமையா, மற்றும் பவானி ரெட்டி ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு எப். எஸ். பைசல் இசை அமைத்திருந்தார். ஏ. ஆர் குமரேசன் படத்தொகுப்பு செய்தார். இத்திரைப்படம் 27 பிப்ரவரி 2015 அன்று வெளியிடப்பட்டது. நடிகர்கள்
தயாரிப்புபசங்க, கோலி சோடாவுக்குப் பின் அதில் நடித்த நான்கு நடிகர்களும் மீண்டும் வஜ்ரமில் இணைந்தனர். புதுமுகம் பவானி ரெட்டி பெண் கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் ஜெயபிரகாஷ் எதிர்மறை வேடத்தில் நடித்துள்ளார். தம்பி ராமையா ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்தார். படப்பிடிப்பு அசாம் காடுகளில் நடைபெற்றது.[2] வெளியீடுபடத்தின் செயற்கைக்கோள் உரிமைகள் ராஜ் டிவிக்கு விற்கப்பட்டன. இந்த படத்திற்கு அதிக வன்முறை இடம் பெற்றமை காரணமாக இந்திய தணிக்கை வாரியம் "ஏ" சான்றிதழ் வழங்கியது, இருப்பினும் அது மீண்டும் தணிக்கை செய்யப்பட்டு "யு" சான்றிதழ் வழங்கப்பட்டது.[3][4] குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia