பசங்க (திரைப்படம்)
பசங்க, 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை சசிகுமார் தயாரிக்க, அறிமுக இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தின் கதாநாயகன் விமல் ஒரு புதுமுகம். கதாநாயகி வேகா. இவர் சரோஜா என்ற படத்தில் நடித்தவர். இவர்கள் தவிர சில குழந்தைகள் முக்கிய வேடங்களிலும் மற்றும் துணை கதாபாத்திரங்களில் சிலரும் நடித்து உள்ளனர். இந்த திரைப்படம் மே 1, 2009 அன்று வெளியானது. கதாப்பாத்திரங்கள்
பாடல்கள்இந்த திரைப்படத்தில் 4 பாடல்கள் இடம் பெற்று உள்ளன. சசிகுமாரின் சுப்ரமணியபுரம் திரைப்படத்திற்கு இசையமைத்த ஜேம்ஸ் வசந்தன் இந்த படத்திற்கும் இசை அமைத்து உள்ளார். பாடல்களை தாமரை, யுகபாரதி மற்றும் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் எழுதி உள்ளனர். ஒரு பாடலை புகழ் பெற்ற இசை மேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடி உள்ளார். கமல்ஹாசன் அவர்கள் இந்த படத்தின் பாடல்களை வெளியிட்டது சிறப்பம்சம்.
விருதுகள்
|
Portal di Ensiklopedia Dunia