வஞ்சாய் மாவட்டம் (ஹொங்கொங் தீவு)
வஞ்சாய் மாவட்டம் (Wan Chai District) ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். இது ஹொங்கொங் தீவில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஒரு மாவட்டமும் ஆகும். இந்த மாவட்டங்களில் மக்கள் தொகை 2001 ஆம் ஆண்டில் கணிப்பின் படி 167,146 ஆகும். ஹொங்கொங்கில் உள்ள பதினெட்டு மாவட்டங்களில், அதிகமான நடுத்தர வீடமைப்புகளைக் கொண்ட மாவட்டத்தில் மூன்றாம் நிலையில் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ளோர் ஹொங்கொங்கில் படித்தோர் எண்ணிக்கையில் இரண்டாம் நிலையையும், ஹொங்கொங்கில் அதிகம் வருமாணம் ஈட்டுவோரின் எண்ணிக்கையில் முதன்மையான மாவட்டமும் ஆக விளங்குகிறது. அத்துடன் ஹோங்கொங் மக்கள் தொகையை விகிதாசாரத்தின் படி இந்த மாவட்டம் இரண்டாவது குறைந்த மக்கள் தொகையையும், பழமையான வீட்டுத் தொகுதிகளைக் கொண்ட மாவட்டத்தில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. சிறப்புஹொங்கொங்கில் ஹொங்கொங் பொது வீடமைப்பு திட்ட குடியிருப்புத் தொகுதிகளைக் கொண்டிராத ஒரே மாவட்டம் இதுவாகும். அத்துடன் இந்த மாவட்டத்தில் ஐந்தில் ஒருவர் HKD 1 மில்லியனுக்கு மேற்பட்ட செல்வம் உள்ளவர்களாக இருக்கின்றனர் என புள்ளி விபர அறிக்கைகள் காட்டுகின்றன.[1] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia