வனம் (திரைப்படம்)
வனம் ( Vanam ) என்பது 2021ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான பரபரப்பூட்டும் திரைப்படமாகும்.[1] இதை அறிமுக இயக்குநர் சிறீகண்டன் ஆனந்த் இயக்யிருந்தார். கோல்டன் ஸ்டார் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது. வெற்றி, அனு சித்தாரா, சுமிருதி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இரான் ஈதன் யோகான் இசையமைத்துள்ளார். படம் 26 நவம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. கதைச் சுருக்கம்ஒரு கலைக் கல்லூரி மாணவர், ஒரு ஆவணப்படத் தயாரிப்பாளரின் உதவியுடன், விடுதி அறையில் தங்கியிருந்தவர்களின் மர்மமான மரணத்திற்கான காரணங்களைக் கண்டறிய முயற்சிக்கிறார். நடிகர்கள்
ஒலிப்பதிவுஒலிப்பதிவையும், இசையையும் ரான் ஈதன் யோகான் மேற்கொண்டார். வெளியீடுஇப்படம் 26 நவம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்களிடமிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது.[2] வரவேற்புதி டைம்ஸ் ஆஃப் இந்தியா 5க்கு 2.5 மதிப்பீட்டைக் கொடுத்து, "வனம் ஒரு திகில் திரைப்படம்" என்று எழுதியது.[3] Newstodaynet.com இன் பாரத் குமார், "வனம் ஒரு கண்ணியமான பார்வையை நிர்வகிக்கும் ஒரு திரைப்படம். நல்ல எழுத்துதான் முக்கியம்." என எழுதினார்.[4] சிஃபி 5 க்கு 2 மதிப்பீட்டைக் கொடுத்து, "வனம் தமிழ் படத்தில் ஒரு தீவிரமான பின்னோக்கிய அத்தியாயத்துடன் மற்றொரு திகில்-பரபரப்பூட்டும் திரைப்படம்" என்று எழுதியது.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia