வன அறிவியல் மையம்வன் விஞ்ஞான் கேந்திரா (Van Vigyan Kendra)(வ.வி.கே.)[1][2][3] அல்லது வன அறிவியல் மையங்கள் (வ அ மை) என்பது இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுமத்தினால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பாகும்.[4][5] இது விவசாயிகளால் உருவாக்கப்பட்ட வன அடிப்படையிலான தொழில்கள் மற்றும் வன ஆராய்ச்சி நிறுவனங்கள் உருவாக்கிய பல்வேறு தொழில்நுட்பங்களைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டது. செயல்பாடுகள்வன அறிவியல் மையம் மரம்வளர்ப்பு, மரவளர்ப்பு மேம்பாடு, மண் மற்றும் நீர் பாதுகாப்புத் தொழில்நுட்பம், மற்றும் உவர்ப்பு நிலங்களில் காடு வளர்ப்பு தொழில் நுட்பங்கள், வனவியல் தொழிநுட்ப பயன்பாடு நீட்டிப்பு, கரிம வேளாண்மை மற்றும் கூட்டெரு நுட்பங்கள், நிலையான நிலப்பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய அமைப்புகள் மற்றும் அறிமுகம் மற்றும் தளவாடத்திற்காக மரம் மற்றும் பிற மர இனங்கள் குறித்த ஆய்வினை மேற்கொள்கின்றன. நாற்றுகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக உயர்ந்த நடவுப் பொருட்களை வழங்குவதில் முக்கியத்துவம் வழங்குகிறது. இது வனவியல் மற்றும் விவசாயத்துடன் தொடர்புடைய மக்களுக்கு உதவுகின்றது. வனவியல் ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வு திட்டம் மற்றும் அதன் பயன்பாடு மற்றும் காடுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்கள் குறித்த பயிற்சிகளை வன அறிவியல் மையம் வழங்குகிறது. மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia