வன மேலாண்மைகானக மேலாண்மை (Forest management) என்பது கானியலின் ஒரு கிளைப்பிரிவாகும். இது ஒட்டுமொத்த ஆட்சி, சட்ட, பொருளியல், சமூகக் கூறுபாடுகளையும் அறிவியல் தொழிநுட்பக் கூறுபாடுகளிலும் அக்கறை கொண்டுள்ளது. கானக மேலாண்மையில் மரவளர்ப்பு, கானகப் பாதுகாப்பு, கானகச் சட்டம் ஆகியன உள்ளடங்கும். மேலும், இதில் மர மேலாண்மை, வனப்பியல் பொழுதுபோக்கு, நகர விழுமியங்கள, நீர்வள மேலாண்மை, கானுயிரிகள் உள்நாட்டு, கடலோர மீன்வளம், கானக மரப் பொருட்கள், தாவர மரபியல் வளங்கள், பிற மரமல்லா கானக விளைபொருட்கள் ஆகியனவும் அடங்கும்.[1] மேலாண்மை நோக்கங்களாக பேணுதலும் பயன்பாடும் அல்லது இரண்டுமோ அமைகிறது. கானக நுட்பங்களாக, மர அறுவடை, பல்வேறு மர இனங்களால் கானகத் திட்டமிடலும் மீட்டாக்கமும், காட்டின் ஊடாக வழித்தடங்களும் சாலைகளும் அமைத்துப் பேணுதல், காட்டுத்தீயைத் தவிர்த்தல் ஆகியன அமைகின்றன. கானக மேலாண்மை என்பது கானியல் கோட்பாடுகள், வணிகக் கோட்பாடுகள் ஆகியவற்றைச் சீரிய முறையில் பயன்படுத்தி கானகத்திற்கென்று சில குறிக்கோள்களை எட்டுவது ஆகும். எனவே ஒரு கானக ஆட்சி பொறுப்பாளர் அல்லது காப்பாளர் கானகம் தொடர்பான பல துறைகளான மர வளர்ப்பியல், கானக அளவியல், மரம் வெட்டும் முறைகள், மர நுட்பம், மர அறிவியல், கானகச் சுற்றுப்புறவியல், கான் பூச்சியல், கான் நோயியல், பொருளியல், கானக மண்ணியல், நீர்த் தேக்க மேலாண்மை, வணிக மேலாண்மை, விற்பனை, சமூகவியல், கான் விலங்கியல் போன்றவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றிருத்தல் கட்டாயம் ஆகும். மேற்கூறிய அனைத்துத் துறைகளிலும் ஒருவர் வல்லுனராக இருக்க வேண்டிய தேவை இல்லை எனினும் இவை அனைத்திலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே கானகத்தை நல்ல முறையில் மேலாள முடியும். இந்தியாவில் கானக மேலாண்மை 1867 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. சர் டெய்ட்ரிச் பிராண்டிசு என்பார் இந்தியாவில் தலைமைக் கானகக் கண்காணிப்பாளராக அமர்த்தப்பட்டு இந்திய கானக மேலாண்மைப் பணி தொடங்கப்பட்டது. இப்போதைய கானக மேலாண்மைக் கொள்கையில் முதன்மைக் கூறுகளாக கானகப் பாதுகாப்பு, கானக மேம்பாடு, சமூகக் காடுகள் ஆகியவை உள்ளன.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia