தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக்கழகம்
தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடம்
குறிக்கோளுரைஉள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
வகைதமிழ் - பொது
உருவாக்கம்15 செப்டம்பர் 1981 (43 ஆண்டுகள் முன்னர்) (1981-09-15)
வேந்தர்தமிழ்நாட்டு முதலமைச்சர்
துணை வேந்தர்முனைவர். க. சங்கர், மாண்பமை துணைவேந்தர் (பொ)[1]
அமைவிடம்,
10°44′11″N 79°05′53″E / 10.7363°N 79.0980°E / 10.7363; 79.0980
வளாகம்972.7 ஏக்கர்
இணையதளம்www.tamiluniversity.ac.in
நூலகக் கட்டடம்

தமிழ்ப் பல்கலைக்கழகம் (Tamil University) என்பது தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1981, செப்டம்பர் 15ஆம் நாள் உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி சாலையில் 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழ் மொழி, தமிழர் பண்பாடு போன்றவற்றின் முதன்மையான உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டது இப்பல்கலைக்கழகம்.

தமிழ்ப் பல்கலைக்கழகத் தனிப் பெருஞ்சின்னம்

தமிழ்ப் பல்கலைக்கழகத் தனிப் பெருஞ்சின்னம் (emblem) பற்றிய விளக்கம் பின்வருமாறு அமையும்.[2]

துணைவேந்தர்கள்

எண் படம் பெயர்

(பிறப்பு–இறப்பு)

பதவிக்காலம்[3]
பதவியேற்பு பதவி விலகல் கால அளவு
1
வ. ஐ. சுப்பிரமணியம்

(1926-2009)

19 செப்டம்பர் 1981 19 சூன் 1984 2 ஆண்டுகள், 274 நாட்கள்
? ???? 20 சூன் 1984 21 செப்டம்பர் 1984 0 ஆண்டுகள், 93 நாட்கள்
(1)
வ. ஐ. சுப்பிரமணியம்

(1926-2009)

22 செப்டம்பர் 1984 31 சூலை 1986 1 ஆண்டு, 312 நாட்கள்
2 ச. அகத்தியலிங்கம்

(1929-2008)

1 திசம்பர் 1986 30 நவம்பர் 1989 2 ஆண்டுகள், 364 நாட்கள்
? ???? 1 திசம்பர் 1989 3 திசம்பர் 1989 0 ஆண்டுகள், 2 நாட்கள்
3 சி. பாலசுப்பிரமணியன்

(1935-1998)

4 திசம்பர் 1989 3 திசம்பர் 1992 2 ஆண்டுகள், 365 நாட்கள்
? ???? 4 திசம்பர் 1992 15 திசம்பர் 1992 0 ஆண்டுகள், 11 நாட்கள்
4 ஔவை நடராசன்

(1936-2022)

16 திசம்பர் 1992 15 திசம்பர் 1995 2 ஆண்டுகள், 364 நாட்கள்
? ???? 16 திசம்பர் 1995 10 சனவரி 1996 0 ஆண்டுகள், 25 நாட்கள்
5 கி. கருணாகரன் 11 சனவரி 1996 3 செப்டம்பர் 1998 2 ஆண்டுகள், 235 நாட்கள்
? ???? 4 செப்டம்பர் 1998 18 பிப்ரவரி 1999 0 ஆண்டுகள், 167 நாட்கள்
6 கதிர் மகாதேவன்

(1936 (?) - 2016)

19 பிப்ரவரி 1999 14 செப்டம்பர் 2001 2 ஆண்டுகள், 207 நாட்கள்
? ???? 15 செப்டம்பர் 2001 18 திசம்பர் 2001 0 ஆண்டுகள், 94 நாட்கள்
7 இ. சுந்தரமூர்த்தி

(1942-)

19 திசம்பர் 2001 18 திசம்பர் 2004 2 ஆண்டுகள், 365 நாட்கள்
? ???? 19 திசம்பர் 2004 5 சூன் 2005 0 ஆண்டுகள், 168 நாட்கள்
8 சி. சுப்பிரமணியம் 6 சூன் 2005 5 சூன் 2008 2 ஆண்டுகள், 365 நாட்கள்
? ???? 6 சூன் 2008 18 சூன் 2008 0 ஆண்டுகள், 12 நாட்கள்
9 ம. இராசேந்திரன்

(1951-)

19 சூன் 2008 18 சூன் 2011 2 ஆண்டுகள், 364 நாட்கள்
? ???? 19 சூன் 2011 9 பிப்ரவரி 2012 0 ஆண்டுகள், 235 நாட்கள்
10 ம. திருமலை

(1953-)

10 பிப்ரவரி 2012 9 பிப்ரவரி 2015 2 ஆண்டுகள், 364 நாட்கள்
? ???? 10 பிப்ரவரி 2015 5 ஆகத்து 2015 0 ஆண்டுகள், 176 நாட்கள்
11 க. பாஸ்கரன்

(1951-)

6 ஆகத்து 2015 5 ஆகத்து 2018 2 ஆண்டுகள், 364 நாட்கள்
? ???? 6 ஆகத்து 2018 3 அக்டோபர் 2018 0 ஆண்டுகள், 58 நாட்கள்
12 கோ. பாலசுப்பிரமணியன்

(1959-)

4 அக்டோபர் 2018 3 அக்டோபர் 2021 2 ஆண்டுகள், 364 நாட்கள்
? ???? 4 அக்டோபர் 2021 12 திசம்பர் 2021 0 ஆண்டுகள், 69 நாட்கள்
13 வி. திருவள்ளுவன் 13 திசம்பர் 2021 20 நவம்பர் 2024[4] 2 ஆண்டுகள், 343 நாட்கள்
பொறுப்பு க. சங்கர்[5] 21 நவம்பர் 2024 பதவியில் 0 ஆண்டுகள், 188 நாட்கள்

புலங்கள்

கலைப்புலம்

பழங்கலை வடிவங்களை அவற்றின் மரபு, சுய அமைப்பு, தூய்மை கெடாது பாதுகாத்தல், புது உத்திகள் கண்டு அவற்றின் வளர்ச்சிக்கு உதவுதல் முதலிய விரிவானஅடிப்படை நோக்கம் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் நான்கு துறைகள் தொடங்கப்பட்டு தற்போது மூன்று துறைகள் செயல்பட்டுவருகின்றன.

  • சிற்பத்துறை
  • இசைத்துறை
  • நாடகத்துறை

சுவடிப்புலம்

தமிழ்ப் பணிக்கு அடிப்படையாக அமையும் ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துச்சுவடிகள், கல்வெட்டுச் சான்றுகள் முதலியவற்றைத் தேடிக் கண்டுபிடித்துத் தொகுத்துப் பாதுகாத்தல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகிய நோக்கம் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் நான்கு துறைகள் செயல்பட்டு வருகின்றன.

  • ஓலைச்சுவடித்துறை
  • அரிய கையெழுத்துச்சுவடித்துறை
  • கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை
  • கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை

வளர்தமிழ்ப்புலம்

பலவிடங்களில் வாழ்ந்துவரும் தமிழர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் விரிவானஅடிப்படையில் பலதுறை சார்புடையதாக ஆய்வு அமைய வழிசெய்தலை நோக்கமாகக் கொண்டது இப்புலம்.

  • அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை
  • மொழிபெயர்ப்புத் துறை
  • அகராதியியல் துறை
  • சமூக அறிவியல் துறை
  • அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை
  • கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை

மொழிப் புலம்

இலக்கிய இலக்கண ஆராய்ச்சிகளை வளர்ப்பது, தமிழ் இலக்கியப் படைப்புகளை உரிய முறையில் உலகிற்கு அறிமுகப்படுத்துவது ஆகிய அடிப்படை நோக்கங்களைக் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் ஆறு துறைகள் செயல்பட்டுவருகின்றன.

  • இலக்கியத் துறை
  • மொழியியல் துறை
  • மெய்யியல் துறை
  • பழங்குடி மக்கள் ஆய்வு மையம்
  • நாட்டுப்புறவியல் துறை
  • இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி

அறிவியற் புலம்

பழந்தமிழரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மரபுச் செல்வங்களைத் தேடிக் கண்டு தொகுத்தல், ஆய்வு செய்தல் மற்றும் இக்கால நவீன தொழில்நுட்ப நுணுக்கங்களைத் துணை கொண்டு பயன் காணல் முதலான நோக்கங்களைக் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் இப்போது ஆறு துறைகள் செயல்படுகின்றன.

  • சித்த மருத்துவத்துறை
  • தொல்லறிவியல் துறை
  • தொழில் மற்றும் நில அறிவியல் துறை
  • கட்டடக்கலைத்துறை
  • கணிப்பொறி அறிவியல் துறை
  • சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை

வெளியீடுகள்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முக்கிய வெளியீடுகளாவன:[6]

  • பெருஞ்சொல்லகராதிகள் (5 தொகுதிகள்)
  • கலைக்களஞ்சியங்கள் (30 தொகுதிகள்)
  • சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம்(3)
  • பல துறைசார் கலைச் சொல்லகராதிகள்(12)
  • பொறியியல் நூல்கள் (13)
  • மருத்துவ நூல்கள் (14)

தமிழ் எழுத்து வடிவில் கட்டடங்கள்

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் எழுப்பப்படும் புலக்கட்டடங்கள் அவற்றின் உருவ அமைப்பில் "தமிழ்நாடு" என்ற சொல்லின் எழுத்துக்களைப் போன்று வடிவமைக்கப்படும்.[7] அவ்வகையில் தமிழ்நாடு என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களைக் குறிக்கும் நிலையில் ஒவ்வொரு எழுத்துக்கும் (த, மி, ழ், நா, டு) ஒவ்வொரு கட்டடம் அமையும்.[8][9] 'த' வடிவக்கட்டடத்தில் கலைப்புலத்துறைகளும், 'நா' வடிவக் கட்டடத்தில் சுவடிப்புலத் துறைகளும் அமையும். 'ழ்' வடிவக் கட்டடத்தில் மொழிப்புலம் செயல்பட்டுவருகிறது. 'மி' வடிவக் கட்டடத்தின் கட்டுமானம் முடிவடைய உள்ளது. இதில், அறிவியல் துறைகள் கொண்டுவரப்படவுள்ளன. 'டு' வடிவக் கட்டடம் இறுதிக்கட்டத்தையடைந்தது.[10] 'டு' வடிவக்கட்டடம் அண்மையில் திறக்கப்பட்டது. தற்போது 'மி' வடிவத்திலுள்ள அறிவியல் புலக்கட்டடம் 8 பிப்ரவரி 2016இல் திறக்கப்பட்டது.[11]

மேற்கோள்கள்

  1. "தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக வி.திருவள்ளுவன் நியமனம்". Dailythanthi.com. 2021-12-12. Retrieved 2021-12-12.
  2. தமிழ்ப்பல்கலைக்கழக வரலாறு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2006, ப.viii
  3. The ordinal number of the term being served by the person specified in the row in the corresponding period
  4. தஞ்சை தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் சஸ்பெண்ட், ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், 20 நவம்பர் 2024
  5. "பொறுப்பு துணைவேந்தர் vs பொறுப்பு பதிவாளர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.யில் அதிகார மோதல் - பின்னணி என்ன?". Hindu Tamil Thisai. 2024-12-29. Retrieved 2025-05-16.
  6. மொழியியல் அறிஞர் பேராசிரியர் வ.அய.சுப்பிரமணியம் - முனைவர் இராம.சுந்தரம்
  7. தமிழ்ப்பல்கலைக்கழகம் ஒரு கண்ணோட்டம், 1986
  8. Varsity to have buildings in Tamil letter form, The Hindu, November 26, 2009
  9. புதுமை: எழுத்து வடிவில் கட்டடங்கள்!, தினமணி, ஜனவரி 9, 2011
  10. தமிழ்ப் பல்கலை.யில் கட்டடம் கட்ட தமிழக அரசு ரூ.15 கோடி அனுமதி, தினமணி, 26 ஜுலை 2014
  11. தமிழ்ப் பல்கலை.யில் அறிவியல் புலக் கட்டடம் திறப்பு தினமணி, 9 பிப்ரவரி 2016

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tamil University
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

தமிழ்நாடு என்ற சொல்லின் அமைப்பில் அமைந்த ஐந்து புலக் கட்டடங்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya