வர்த்தமானப்புத்தகம்![]() வர்த்தமானபுத்தகம் (Varthamanappusthakam) என்பது நவீனகால சிரிய-மலபார் தேவாலயத்தின் நஸ்ராணி மாப்பிளா பரேம்மாக்கல் தோமா கதனார் என்பவர் எழுதிய மலையாள பயணக் குறிப்பு ஆகும். இந்திய மொழியில் எழுதப்பட்ட முதல் பயணக் குறிப்பு இதுவெனக் கருதப்படுகிறது. இது 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது (1790).[1] ஆனால் இதன் இருப்பு பிற்கால தலைமுறையினரால் முற்றிலுமாக மறக்கப்பட்டது. இது 1935 இல் கண்டுபிடிக்கப்பட்டு 1936 ஆம் ஆண்டில் அதிரம்புழா செயின்ட் மேரிஸ் அச்சகத்தில் லூக்கா மத்தாய் பிளதோட்டம் என்பவரால் முதன்முதலில் அச்சிடப்பட்டது.[2][3][4] பயணம்மலபார் கடற்கரையிலிருந்து (நவீன கேரளாவிலிருந்துலிஸ்பன் வழியாக உரோம் வரை) மார் ஜோசப் கரியத்திலுடன் இணைந்து நூலாசிரியர்பரேம்மாக்கல் தோமா கதனார் மேற்கொண்ட பயணத்தின் வரலாற்றை இது கூறுகிறது.[5][6] இந்த புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி கொச்சியில் உள்ள செயின்ட் தாமஸ் கிறிஸ்தவ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.[7][8][4] கேரளாவின் சிரிய கத்தோலிக்கர்களின் குறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த உரோம் பயணம் அதிரம்புழா என்னுமிடத்திலிருந்து 1785 இல் பூதத்தில் இட்டிக்குருவில்லா தாரகன் என்பவரின் இல்லத்தில் உள்ள அவரது படகு வீட்டிலிருந்து தொடங்கியது அவர்கள் முதலில் ஒரு நாட்டுப் படகு மூலம் காயங்குளம் நோக்கிச் சென்றனர். பின்னர் சென்னை சென்று அங்கிருந்து அவர்கள் இலங்கையின் கண்டி நகருக்குச் சென்றனர். பின்னர், அவர்கள் இலங்கையிலிருந்து ஆப்பிரிக்காவிலுள்ள நன்னம்பிக்கை முனையை நோக்கி கப்பலில் சென்றனர். அங்கிருந்து போர்த்துகலுக்குச் செல்லத் திட்டமிட்டனர். ஆனால் அட்லாண்டிக் பெருங்கடலின் பாதகமான காற்று அவர்கள் கப்பலை இலத்தீன் அமெரிக்கக் கடற்கரைக்கு கொண்டு சென்றது. அங்கிருந்து அவர்கள் தங்கள் இலக்கை அடைந்தனர்.[9] எட்டு ஆண்டுகள் பயணம் செய்து இலக்கை அடைந்த அவர்கள் கேரள திருச்சபையிலுள்ள பிரச்சினைகள் குறித்து உரோம் மற்றும் லிஸ்பனில் உள்ள தேவாலய அதிகாரிகளை நம்ப வைப்பதில் வெற்றி பெற்றனர். நாடு திரும்பும் வழியில் அவர்கள் கோவாவில் தங்கியுள்ளனர். அங்கு மார் கரியத்தில் இறந்தார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia