வலைவாசல்:கருநாடக இசை


தொகு  

கருநாடக இசை வலைவாசல்


வீணை வரைபடம்
வீணை வரைபடம்

கருநாடக இசை தென்னிந்திய இசை வடிவமாகும். உலகின் தொன்மையான இசைவடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் என்னும் மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கர்நாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன. இம்மூவருக்கும் முன்னர் ஆதி மும்மூர்த்திகள் என முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். இவர்கள் தியாகராஜ சுவாமிகள் போன்றோருக்கு வழிகாட்டிய முன்னோடிகள். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள்.

கருநாடக இசை பற்றி மேலும்...
தொகு  

சிறப்புக் கட்டுரை


வீணை
வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம். பண்டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17-நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது. குடம், மேற்பலகை, தண்டி, மாடச்சட்டம், சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் ஆகியவை வீணையின் பாகங்களாகும்.

வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது.

தொகு  

பகுப்புகள்


கருநாடக இசை பகுப்புகள்


தொகு  

கலைஞர்கள்


தியாகராஜர்
தியாகராஜ சுவாமிகள் (1767 -1848) தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர். தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய இவர் ஒரு சிறந்த இசை ஞானியாக விளங்கியவர்.
தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


  • கருநாடக இசை தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கருநாடக இசை தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
  • கருநாடக இசை தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • கருநாடக இசை தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • கருநாடக இசை தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்
தொகு  

உங்களுக்குத் தெரியுமா...?


  • கீதங்கள், கீர்த்தனைகள், பதங்கள் போன்றவற்றை இயற்றுபவர் கருநாடக இசைத் துறையில் வாக்கேயக்காரர் என அழைக்கப்படுவார்.
  • மேளகர்த்தா இராகங்கள் கருநாடக இசையின் இராகங்களில், ச - ரி - க - ம - ப - த - நி என்ற ஏழு சுரங்களையும் கொண்டவையாகும். வேறுபாடுள்ள சுரங்கள் மாறுவதாலேயே வித்தியாசங்கள் ஏற்படுகின்றன.
  • 'மதங்கம்' என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே மிருதங்கம் என்னும் வடமொழிச் சொல் எனக் கருதுகிறார்கள். தமிழின் 'மெது' என்பதே 'மிருது' எனத் திரிந்தது.
தொகு  

சிறப்புப் படம்


[[Image:|350px|{{{texttitle}}}]]

திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளை என்று பரவலாக அறியப்பட்ட டி. என். ராஜரத்தினம் பிள்ளை (1898-1956) ஒரு நாதசுரக் கலைஞர் ஆவார். நாதசுரச் சக்கரவர்த்தி எனப் பலரும் குறிப்பிடும் அளவுக்கு மிகுந்த புகழுடன் விளங்கினார். சில தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

படம்: User:Mohan gandhi
தொகுப்பு


தொகு  

திரைப்படப் பாடல்களில் இராகங்களின் பயன்பாடு


பாடல் இராகம் இசையமைப்பாளர் பாடலைப் பாடியவர்கள் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
பூங்கதவே தாழ் திறவாய்… மாயாமாளவகௌளை இளையராஜா தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன் நிழல்கள்
உள்ளத்தில் நல்ல உள்ளம்… சக்ரவாகம் விஸ்வநாதன் - ராமமூர்த்தி சீர்காழி கோவிந்தராஜன் கர்ணன்
மாதவிப் பொன்மயிலாள்... கரகரப்பிரியா எம். எஸ். விஸ்வநாதன் டி. எம். சௌந்தரராஜன் இரு மலர்கள்
தொகு  

செய்திகளில் கருநாடக இசை


விக்கிசெய்திகளில் கருநாடக இசை வலைவாசல்
தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


தமிழ்தமிழ்
தமிழ்
தமிழ்நாடுதமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியாஇந்தியா
இந்தியா
இலங்கைஇலங்கை
இலங்கை
தமிழ் தமிழர் தமிழ்நாடு இந்தியா இலங்கை
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya