வளிமண்டலம் (அலகு)நியம வளிமண்டல அழுத்தம் அல்லது நியம வளிமண்டலம் (standard atmosphere, "atm"') என்பது அழுத்தத்தின் ஓர் அலகாகும். இது 101325 Pa (1.01325 பார்) என்பதற்கு சமனாகும். இவ்வலகு சில வேளைகளில் reference அல்லது நியம அழுத்தம் (standard pressure) எனவும் அழைக்கப்படும். வரலாறு1954 ஆம் ஆண்டில், 10வது அலகுகளுக்கான பொது மாநாட்டில் "நியம வளிமண்டலம்" என்ற அலகு பொதுப் பயன்பாட்டிற்காக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1 நியம வளிமண்டலம் 1,013,250 தைன்கள்/சதுர மீட்டர் (101325 Pa) என்பதற்கு சமன் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[1] இப்பெறுமானம் பாரிசு நகரத்தில் நிலநேர்க்கோட்டில் சராசரி கடல் மட்டத்தில் சராசரி வளிமண்டல அழுத்தம் ஆகும். பொதுவாக இதே நிலநேர்க்கோட்டில் உள்ள தொழில்வள நாடுகளின் சராசரி கடல் மட்ட அழுத்தங்களுக்கு ஏறத்தாழ சமனாக இருந்தது. வேதியியலிலும், மற்றும் பல தொழிற்துறைகளிலும், நியம அழுத்தம் "நியம வெப்பநிலை மற்றும் அழுத்தம்" (Standard Temperature and Pressure, நிவெஅ) பயன்படுத்தப்படுகிறது. இது 1 atm (101.325 kPa) ஆகும், ஆனாலும் நியம அளவைகள் சில பின்னர் மாற்றமடைந்துள்ளன. 1982 இல் பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (IUPAC), பொருட்களின் இயற்பியல் பண்புகளுக்கு "ஒரு நியம அழுத்தம்" குறிப்பாக 100 kPa (1 bar)* ஆக இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது.[2] அழுத்த அலகுகள்
இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia