பாசுக்கல் (அலகு)பாசுக்கல் அல்லது பாஸ்கல் (Pascal) (குறியீடு Pa) என்பது அழுத்தத்தின் SI அலகு ஆகும். பாசுக்கல் என்பது ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒரு நியூட்டன் எடை செயல்படும்போதுள்ள அழுத்தம் ஆகும். அதாவது ஒரு பாசுக்கல் என்பது நியூட்டன்/மீட்டர்2 க்குச் சமமாகும். புகழ் பெற்ற பிரான்சியக் கணித அறிஞரும், இயற்பியலாளரும், மெய்யியல் அறிஞருமான பிளேய்சு பாசுக்கல் (Blaise Pascal) நினைவாக இந்த அலகு பெயரிடப்பட்டுள்ளது.
இதே அலகு தகைவு (stress (physics)|stress), யங் கெழு அல்லது யங் எண்(Young's modulus), இழுவலிமை (tensile strength) ஆகியவற்றையும் அளக்கப் பயன்படுகிறது. தரையில், கடல்மட்டத்தில், சீரான வளிமண்டல அழுத்தம் 101,325 பா (Pa) = 101.325 கிபா (kPa) = 1013.25 ஃகெபா (hPa) = 1013.25 மிபார் (mbar) = 760 டார் (ISO 2533) ஆகும். உலகெங்கிலும் வானிலையாளர்கள் (Meteorologists) வெகு காலமாக வளிமண்டல அழுத்தத்தை மில்லிபார் என்னும் அலகால் அளந்துவந்தனர். SI அலகுகள் வந்தபிறகும் இந்த மில்லிபார் அளவை பின்பற்றும் முகமாக மில்லிபாருக்கு இணையான ஃகெக்டோ-பாசுக்கல் என்னும் அலகைப் பயன்படுத்துகின்றனர். ஒரு ஃகெக்டோ பாசுக்கல் என்பது 100 பாசுக்கலுக்கு ஈடு. ஒரு மில்லிபார் என்பது 100 பாசுக்கல் ஆகும். பிற துறைகளில் கிலோபாசுக்கல் போன்ற SI அலகுகளையே பயன்படுத்துகின்றனர். குறைக்கடத்தி கருவி உருவாக்க இயலிலும், வெற்றிடத்தன்மையை (அழுத்தக் குறைவுத் தன்மையை) அளக்க பாசுக்கல் என்னும் அழுத்த அளவு பயன்படுத்தினாலும், கூடவே டார் (Torr) என்னும் அளவையும் பயன்படுத்துகின்றனர்.
முன்னாளைய சோவியத் யூனியனில் மீட்டர்-டன்-நொடி அலகுமுறையில் (mts system) பீசே (pieze) என்னும் அலகை அழுத்தத்திற்குப் பயன்படுத்தினர். அது ஒரு கிலோபாசுக்கலுக்கு ஈடு ஆகும். பல்வேறு (தோராயமான) மதிப்புகளின் எடுத்துக்காட்டுக்கள்(அறிமுகத்துக்கு SI முன்னொட்டு பார்க்கவும்)
¹பூமியின் நிலப்பரப்பில் மற்ற அழுத்த அலகுகளுடன் ஒப்பீடு
|
Portal di Ensiklopedia Dunia