வாகன ஆராய்ச்சி மேம்பாட்டு தொழிலகம்

வாகன ஆராய்ச்சி மேம்பாட்டு தொழிலகம் (Vehicle Research and Development Establishment) என்பது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டி. ஆர். டீ. ஓ) கீழ் செயல்படும் ஒரு ஆராய்ச்சி மையமாகும். இது மகாராட்டிர மாநிலத்தில் அஹ்மத்நகர் மாவட்டத்தில் வாகன் நகர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளைக் கணக்கில் கொண்டு இந்த ஆராய்ச்சி மையம் இலகுவான தடம் கொண்ட வாகனங்கள், சுழலும் சக்கரங்கள் கொண்ட வாகனங்கள், பீரங்கி வாகனங்கள், போன்ற அதி நவீன வாகனங்களை ஆராய்ச்சிகள் மூலம் உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளனர். இந்த மையத்தின் முக்கியமான நோக்கம், காலாட்ப்டைக்கு உகந்த போரிடும் வாகனங்கள், இலகுவான கவச தாக்குதல் வாகனங்கள், சுழலும் பட்டைகளுடன் கூடிய சக்கரங்களை தரையில் இழுத்துச் செல்லும் கவச வாகனங்கள் ஆகியவற்றை பல்வேறு பயன்பாடுகளுக்குத் தகுந்தவாறு வடிவமைத்து அமைத்து இந்திய இராணுவப் படையினருக்கு வழங்குவதாகும்.[1]


மேற்கோள்கள்

  1. ^ "VRDE". Archived from the original on 2008-03-10. https://web.archive.org/web/20080310021228/http://drdo.org/labs/vrde/index.html. Retrieved 2008-02-08

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya