வாரென் கிண்ணம்
வாரென் கிண்ணம் என்பது, ஆண்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதைக் காட்டும் இரண்டு உருவங்களால் அலங்காரம் செய்யப்பட்ட ஒரு வெள்ளியாலான பருகும் கிண்ணமாகும். 1999ல் 1.8 மில்லியன் பவுண்டுகளைக் கொடுத்து பிரித்தானிய அருங்காட்சியகம் இதை வாங்கியது. அக்காலத்தில் இந்த அருங்காட்சியகம் வாங்கியிருந்த பொருட்களில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட தனிக் கொள்வனவு இதுவே. இது பொதுவாக யூலியோ -குளோடிய வம்சக் (கிபி முதலாம் நூற்றாண்டு) காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. எனினும் இதன் நம்பகத்தன்மை குறித்த ஐயங்களும் உள்ளன.[1] இதன் பெயர் தற்காலத்தில் இதன் முதல் உரிமையாளரான எட்வர்டு பெரி வாரென் என்பவரது பெயரைத் தழுவியது. இவரது கலைச் சேகரிப்புக்களுக்காகப் பெரிதும் அறியப்பட்ட இவரது சேகரிப்புக்களில், ரொடினின் "முத்தம்" சிலை, கிரனாச்சின் "ஆதமும் ஏவாளும்" ஓவியம் என்பனவும் அடங்கும்.[2] அலங்கார உருவங்கள்பாலுணர்வுக் காட்சிகளைக் காட்டும் போக்கு உரோமக் கலைகளில் பரவலாகக் காணப்படுகின்றது. ஆனாலும், கிரேக்கக் கலைகளுடன் ஒப்பிடும்போது, உரோமக் கலைகளில், இருபால் சார்ந்த காட்சிகள், ஒரு பால் சார்ந்த காட்சிகளை விடக் கூடுதலாகக் காணப்படுகின்றன. பிற்காலத்தில் இவ்வாறான கலைப்பொருட்கள் தெரிந்து அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது வெளியிடப்படாமல் இருந்திருக்கலாம் என்பதால், அக்காலத்தில் இத்தகைய கலைப்பொருட்கள் குறைவாக இருந்தன என்று சொல்லமுடியாது. மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும் |
Portal di Ensiklopedia Dunia