வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
![]() வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்[4] (Warner Bros. Pictures) என்பது ஒரு அமெரிக்க நாட்டு வார்னர்மீடியா ஸ்டுடியோஸ் & நெட்வொர்க்குகள் குழுமத்திற்கு சொந்தமான திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக திரைப்பட நிறுவனம் ஆகும். இது வார்னர் புரோஸ். இஸ்டுடியோஸ், பர்பேங்க்கின் தலைமையிடமாக உள்ளது. இது வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் குழு பிரிவின் முதன்மை நிறுவனம் மற்றும் வார்னர் புரோஸ். என்டர்டெயின்மென்ட் மற்றும் ஏ டி அன்ட் டி இன் வார்னர்மீடியாவின் ஒரு பிரிவு ஆகும். இந்த நிறுவனம் 1923 ஆம் ஆண்டில் ஹாரி வார்னர், ஆல்பர்ட் வார்னர், சாம் வார்னர் மற்றும் ஜாக் எல். வார்னர் ஆகியோரால் நிறுவப்பட்டது. இது சொந்த திரைப்படங்களைத் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், பிற வார்னர் பிரதர்ஸ் பிரிவுகளில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட படங்களுக்கான திரைப்படத் தயாரிப்பு நடவடிக்கைகள், நாடக விநியோகம், சந்தைப்படுத்தல் மற்றும் மேம்பாடு ஆகியவற்றைக் கையாளுகிறது. இந்த நிறுவனத்தில் வார்னர் பிரதர்ஸ் அனிமேஷன், வார்னர் அனிமேஷன் குழு, நியூ லைன் சினிமா, டிசி பிலிம்ஸ் மற்றும் கேஸில் ராக் என்டர்டெயின்மென்ட் போன்ற பல பிரிவுகளில் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia