மொழியொன்றின் இலக்கணத்தில், பேசுபவர், யாருக்குப் பேசப்படுகிறதோ அவர், இவர்கள் அல்லாத பிறர் ஆகியோர் தொடர்பில் வேறுபாடுகளைக் காட்டும் இலக்கணக் கூறு இடம் எனப்படுகிறது. இது தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூன்று வகைப்படும்.
டிசம்பர் 5, 1969 இல் அமெரிக்க படைத்துறையின் உயர் ஆய்வு திட்டங்கள் நிறுவனத்தால் (DARPA) நான்கு கணினிகள் இணைககப்பட்டு முதன் முதலாக இணையம் உருவாக்கப்பட்டது.
கடற்குதிரைக் குடும்பத்தைச் சேர்ந்த குழாய்மீன் இனத்தில் முட்டைகளை ஆண்கள் தம் உடலுள் சுமக்கின்றன. அவை அவ்வாறு கருவுற்றிருக்கையில் சில கருக்களை தம் உடலுள் உறிஞ்சிக் கொள்ளும் மாறுபட்ட தன்னின உண்ணும் நிகழ்வு அறியப்பட்டுள்ளது.
117,000 நபர்களால் பேசப்படும் கிறீ (Cree) மொழியே கனடாவில் அதிகம் பேசப்படும் முதற்குடிமக்கள் மொழி.
ஓக்லோ என்னும் இடத்தில் மாந்தர்களின் துணை ஏதுமில்லாமல் இயற்கையிலேயே தன்நேர்வாக யுரேனியம் அணு உலைகள் தொடங்கி மிக மிக நெடுங்காலமாக, அதாவது 600,000 ஆண்டுகள் முதல் 1,500,000 ஆண்டுகள் வரையும், இயங்கி வந்திருக்க வேண்டும் என்று 1972-ல் பிரான்சிய அறிவியலாளர்கள் கண்டு பிடித்தனர்.
சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறித்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்களை ஆகும், இவை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களை கொண்டுள்ளது
மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையார் அவரது தந்தை வழி நின்று தமிழ் மொழி தனது தனித்துவத்தை, ஆழுமையை இழக்காமல் இருக்க பிறமொழிச் சொற்கள், நடை, எழுத்துக்கள் தமிழில் மிகுந்து கலைப்பதை எதிர்த்துத் தனித்தமிழைப் பரப்பினார்.
உலகில் 4% மொழிகள் 96% மக்களால் பேசப்படுகின்றன, முதல் 20 மொழிகளை 3.2 பில்லியன் மக்கள் அல்லது அரைவாசி மக்கள் பேசுகின்றனர்.
வொல்பிராம் அல்பா என்பது பல கணிதவியல், அறிவியல், நுட்ப கேள்விகளுக்கு துல்லியமாக (ஆங்கிலத்தில் மட்டும்) பதிலளிக்க கூடிய ஒர் இணைய கேள்வி-பதிலளி இயந்திரம் ஆகும்.
இந்தியாவில் ஏப்ரல் 2009 இல் 403மில்லியன்கைபேசி பயனர்களும், 37 மில்லியன் நில இணைப்பு பயனர்களும் இருக்கிறார்கள்.
உலகில் அதிக விழுக்காடு மக்கள் உயர் கல்வி பெற்ற நாடு கனடா ஆகும். இங்கு 44.6 விழுக்காட்டினர் (2004) பல்கலைக்கழக அல்லது தொழில் கல்லூரிப் படிப்பு முடித்தவர்கள்.
ஐக்கிய அமெரிக்க அரசு புகையிலை (சிக்கிரட்) உற்பத்தியாளர்களருக்கு எதிராக நுகர்வோர் உடல் நலக் கேடு தொடர்பாக தொடுத்த வழக்கின் ஏற்பாடாக 245 பில்லியன் டொலர்களை நிறுவனங்கள் செலுத்தின.