இதை தொகுப்பவர்கள் [[சனவரி 2]], [[2013]] என்று தருவதற்கு பதிலாக [[விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 2, 2013|ஜனவரி 2, 2013]] என்று தாருங்கள். அடுத்து வரும் குறுந்தட்டு திட்டங்களுக்கு இது உதவும்.
ஒரு மாதம் முடிந்தவுடன் முடிந்த மாதத்திற்கான தகவல்கள் இங்கு சேர்க்கப்படும்
விரைந்து ஊரும் தரைவாழ் நச்சுப் பாம்பினமான மாம்பா, பெரும்பாலும் மரத்தில் வாழும். பகலில் சுறுசுறுப்பாக இருக்கும்; இரவில் ஓய்வெடுக்கும்.
இந்து மதத்தில் கூறப்படும் லோகபாலர்களானகுபேரன், யமன், இந்திரன், வருணன் ஆகிய நால்வரும் முறையே வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பெரும் திசைகளைக் காப்பவர்களாகக் கொள்ளப்படுவர்.
வருக்கமாலை எனப்படுவது தமிழ் மொழியில் வருக்க எழுத்துக்களான க, ச, த, ந, ப, ம, வ என்பனவும், உயிரெழுத்துக்களும் ஒவ்வொரு எழுத்தும் முதலாக வர எட்டு விருத்தங்கள் பாடுவது ஆகும்.
சிறுநீர் பெய்யும் சிறுவன் என்பது பெல்சிய நாட்டின் பிரசல்சு நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலை. ஆடையில்லாத நிலையில் சிறுவன் ஒருவன் சிறுநீர் கழிப்பது போன்ற ஒரு நீரூற்றினைக் கொண்ட சிறிய வெண்கலச் சிலை இது.
முதல் எரித மின்னஞ்சல் ஆர்பாநெட் எனும் கணினி வலைப்பின்னலில் அனுப்பப்பட்டது. மே 3ஆம் நாள் 1978 ஆம் ஆண்டில், கேரி துர்க் என்ற ஒருவர் தனது புதிய கணினிகளைப் பற்றி விளம்பரம் செய்வதற்காக, 393 நபர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.
சிவபக்தரான பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசிக்க, நவராத்திரியின் ஆறாம் நாளில்சிவபெருமான் ஆடிய தாண்டவம் முனி தாண்டவம் எனப்படுகிறது.
தன்னுடல் தாக்குமை என்பது தனது உடலிலுள்ள சொந்த உயிரணுக்களையும், இழையங்களையும் தவறுதலாக வெளிக்காரணிகளாக அடையாளப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்பாட்டை இயக்குவதால் தனது சொந்த உயிரணுக்கள், இழையங்களையே தாக்க முற்படல் ஆகும்.
சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்ட ஸ்புட்னிக் 5 விண்கலமே விலங்குகளை விண்வெளிக்கு ஏற்றிச் சென்று மீண்டும் அவற்றைப் பாதுகாப்பாகத் திருப்பிக் கொண்டுவந்த முதல் விண் ஓடம் ஆகும்.
அநுராதபுரத்தின் பஞ்ச பாண்டியர் என்பவர்கள் வட இலங்கையை கி. மு. 103 முதல் கி. மு. 88 வரை தொடர்ச்சியாக ஆண்ட புலாகதன், பாகியன், பாண்டிய மாறன், பழையமாறன், தாட்டிகன் ஆகிய ஐந்து பாண்டியத் தளபதிகள் ஆவர்.
கணிமி (Plasmid) என்பது இவை பொதுவாக வட்ட வளைய வடிவமுடன் ஈரிழை கொண்டவையாக இருக்கும் ஒரு கூடுதலான நிறப்புரி ஆகும். இவை தாம் சார்ந்துள்ள உயிரினத்தின் நிறப்புரியைச் சாரமால் தன்னிச்சையாக பல்கிப் பெருகும் தன்மையை உடையவை.
தேவாங்கு என்பது மனிதர்களும் குரங்குகளும் உள்ள முதனி வரிசையைச் சேர்ந்த சிறு பாலூட்டி விலங்கு.
தூக்க விறைப்பு அல்லது இரவுத் தூக்க ஆண்குறி விறைப்பு என்பது ஆண்கள் உறங்கும் வேளையில் இயல்பாகவே ஏற்படும் ஆண்குறி விறைப்பு ஆகும். உடலியக்க விறைப்புக் கோளாறு இல்லாத எல்லா ஆண்களுக்கும் பொதுவாக இரவில் இரண்டு அல்லது மூன்று முறை இது நேரும்.
விண்வெளிக் கழிவுகள் என்பது பூமியின் வட்டப்பாதையில் பூமியைச் சுற்றிவரும் கழிவுகள் ஆகும். இக்கழிவுகள் அனைத்தும் பூமியிலிருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் பாகங்கள் ஆகும்.
கோவேறு கழுதை என்பது கழுதையும்குதிரையும் தம்மிடையில் இனவிருத்தி செய்வதன் மூலம் பெறப்படும் தனியன்கள் ஆகும். இவை தம்முள் இனக்கருக்கட்டல் செய்து எச்சங்களைத் தராது.
ஹிக்கின்பாதம்ஸ் (படம்) என்பது ஏபெல் யோசுவா இக்கின்பாதம்சு என்ற ஆங்கிலேய நூலகரால் 1844 இல் நிறுவப்பட்ட இந்தியாவிலேயே மிகப் பழைமையான புத்தக நிலையம் ஆகும்.
பழுப்புக் கொழுப்பு திசுக்கள் பிறந்த குழந்தைகளிலும், குளிர்காலத் தூக்கம் மேற்கொள்ளும் விலங்குகளிலும் வெப்ப உற்பத்தியை செய்யும் திசுக்கள் ஆகும்.
உலகில் யூத மதத்தினை பின்பற்றுவோரின் சனத்தொகை 13.4 மில்லியன் அல்லது உலக சனத்தொகையில் ஏறக்குறைய 0.2% ஆகும். கிட்டத்தட்ட 42% யூதர் இசுரேலிலும், 42% யூதர் மக்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும், எஞ்சியோரில் பலர் ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர்.
மக்கா (படம்) சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் வரலாற்றுப் பழைமை வாய்ந்த ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள இசுலாமியர்களது புனித நகரமாகும். வரலாற்றில் இந்நகரம் பெக்கா எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளைக் கொண்டதே முருங்கை மரம் ஆகும்.
பல கிறித்தவ சபைகளில் மண ஒப்பந்தம் செய்த பின், திருமணம் செய்யும் முன் திருமண அறிக்கையினை பொது அறிவிப்பாக வெளியிடும் வழக்கம் உள்ளது.
சிற்றூர்தியின் ஆங்கிலப் பெயரான Van என்பது மூடப்பட்ட ஊர்தியைக் குறிக்கும் Caravan என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம் ஆகும்.
ஒரு பொருளின் வெண் எகிர்சிதறல் அல்லது எதிரொளித் திறன் என்பது அதன் ஒளி பிரதிபலிப்புத் தன்மையாகும். இஃது உள்வரு மின்காந்த கதிர்வீச்சு மற்றும் அதனினின்று பிரதிபலிக்கப்பட்ட கதிர்வீச்சின் விகிதம் எனக்கொள்ளப்படும்.
குளுக்கோஸை பொறுத்துக் கொள்ளும் சோதனை என்பது மனித உடலில் இருந்து இரத்தம் எடுத்து அதை சோதனைக்கு உட்படுத்தி, அதில் குளுக்கோஸ் எந்த அளவு உள்ளது என்பதனைக் கண்டறியும் மருத்துவச் சோதனையாகும்.
கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டி, இருபதுக்கு இருபது போட்டிகளில் மழை அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் போட்டி தடைபட்டிருந்தால், இரண்டாவதாக விளையாடும் அணியின் இலக்கு ஓட்டங்களைக் கணக்கிடுவதற்குப் பயன்படும் ஒரு முறை, ஜயதேவன் முறை அல்லது வி. ஜே. டி. முறை எனப்படும்.
சிவபெருமான் மனிதராக அவதாரம் எடுப்பதில்லை என்ற பரவலான கருத்து நிலவினாலும், அவர் இருபத்து ஏழு அவதாரங்கள் எடுத்துள்ளமையாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் கூறுகிறது.
கும்மியாட்டம் (படம்) தமிழர் ஆடற்கலை வடிவங்களில் ஒன்று. பலர் வட்டமாக அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று, இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம்.
இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.
உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுகாறும் 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
1963 ஆம் ஆண்டில் மலேசியத் தொலைக்காட்சி உலகின் முதல் தமிழ்ச் செய்தி ஒளிபரப்பைத் தொடங்கியது. இதற்கான செய்தியை மலேசிய எழுத்தாளர் எம். துரைராஜ் என்பவர் தொகுத்தளித்தார்.
உலகின் மரம், செடி, கொடிகளும், பாசிகளும், பாக்டீரியாக்களும் ஒளிச்சேர்க்கை மூலமாக மொத்தம் 100,000,000,000 டன்கார்பன்-டை-ஆக்சைடை உயிரகப் பொருளாக ஆண்டுதோறும் மாற்றுகின்றன.
நெடுமுப்போட்டி (டிரையத்லான்) என்பது நீடிக்கும் திறனைச் சோதிக்கும் வண்ணம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெறும் மூன்று விளையாட்டுக்கள் அடங்கிய பல்விளையாட்டுப் போட்டியாகும்.
உத்தேச புற்றுநோய் தோன்றும் வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் (நகரம் அல்லது மாநிலம் அல்லது நாடு) வசிக்கும் மக்களின் மொத்த எண்ணிக்கையையும், அவர்களில் புற்றுநோய் கண்டறியப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கையையும் கொண்டு கணக்கிடப்படுகிறது.
பித்தேகோரசு தேற்றம் என்பது ஒரு செங்கோண முக்கோணத்தில் உள்ள மூன்று பக்கங்களுக்கும் இடையே உள்ள தனிச்சிறப்பான ஒரு தொடர்பைக் கூறும் கூற்று. கர்ணத்தின் நீளத்தின் இருமடியானது, மற்ற பக்க நீளங்களின் இருமடிகளின் கூட்டுக்கு சமம்: a2 + b2 = c2
காலண்டர் என்ற ஆங்கிலச் சொல், 'கலண்டே' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதாகும். கலண்டே (kalendae) என்பதானது, இலத்தீனில் ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற முதல்நாளின் பெயராகும்.
பிபிசி என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் மிகப் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும்.
கோட்பாடு என்பது ஆழ்ந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும், அறிவு சார்ந்ததுமான ஒரு பொதுமைப்படுத்தும் சிந்தனையை அல்லது அச்சிந்தனையின் பெறுபேறுகளைக் குறிக்கும்.
நடிகர் சிவாஜி கணேசன் 1962ல் அமெரிக்காவின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ஒரு நாள் நகரத்தந்தையாகச் சிறப்பிக்கப்பட்டார்.
காரைக்கால் அம்மையார் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.
காவன்தீசனின் பத்துத் தளபதிகள் எனப்படுபவர்கள் இலங்கையின் காவன்தீச மன்னனால் தனது படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பலம் வாய்ந்த விசேட திறமைகள் கொண்ட பத்து இளைஞர்களாவர்.
கனோடெர்மா(படம்) என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக சீனா, ஜப்பான், கொரியா போன்ற ஆசிய நாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
உலகிலேயே மிக உயரமான (807 மீட்டர்/2,648 அடி) நீர்வீழ்ச்சி வெனிசுலாவில் உள்ள ஏஞ்சல் அருவி(படம்)ஆகும்.
1946 இல் முடிசூடிய ஒன்பதாம் இராமா மன்னர் உலகில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் ஒரு நாட்டுத்தலைவரும், தாய்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் மன்னரும் ஆவார்.
அகரமேறிய மெய் முறைமை என்பது தமிழ் பிராமி கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை என்பதை கண்டறியும் முறையாகும்.
ஒரே மூலக்கூற்றுச் சூத்திரத்தையும் வேறுபட்ட கட்டமைப்புச் சூத்திரங்களையும் கொண்ட இரசாயனச் சேர்வைகள் சமபகுதியங்கள் எனப்படும்.
திருத்திய தமிழ் எழுத்துவடிவம் என்பது தமிழ் அரிச்சுவடியின் ஏற்படுத்தப்பட்ட மாற்றமாகும். முன்மொழியப்பட்ட திருத்தங்களில் ஐ எழுத்திற்குப் பதிலான அய், ஔ எழுத்திற்குப் பதிலான அவ் என்பன நிராகரிக்கப்பட்டன.
லட்சியா(படம்) என்பது இந்திய பாதுகாப்பாய்வு மற்றும் மேம்பாட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ஆளிலாத, தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு போரிடு விமானமாகும்.
வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை மணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை மணி நேரத்துக்கும் 120 நிமிடங்கள் என்று உலகத்துக்கு அறிவித்தவர்கள் சாலடியர்களே.
கியூபாவே விழுக்காடு அடிப்படையில் அதிக மருத்துவர்களைக் கொண்ட நாடு, ஒவ்வொரு 1000 நபர்களுக்கும் 6.5 மருத்துவர்கள் உள்ளார்கள்.
யோவான் 3:16 என்பது விவிலியத்தில் மிகவும் அதிகமாகக் கையாளப்படும், மிகவும் புகழ்பெற்ற வசனமாகும். இது கிறித்தவத்தின் கருப்பொருளைச் சுருக்கமாக எடுத்தியம்புவதால் நற்செய்தியின் சுருக்கம் என அழைக்கப்படுகின்றது.
இந்திய விடுதலைப் போராளி சந்திரசேகர ஆசாத் கொல்லப்பட்ட இடமான அலகாபாத் அல்ஃப்ரெட் பூங்கா (படம்) அதன் பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது.
வழமையாக பிரித்தானிய மன்னர்களின் முடி சூட்டும் விழாவும் ஆங்கில, பின்னர் பிரித்தானிய தற்போது பொதுநலவாய மன்னர்களின் உடல் அடக்கங்களும் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் தான் நடைபெறுகின்றன.
குண்டர் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவின் மாநிலமானத் தமிழகத்தில்1982 இல் வன்செயல்கள், மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், போக்கிலிகள் போன்ற சமுதாய விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டச் சட்டமாகும்.
பரப்பிசை (Pop music) என்பது 1950களில் ராக் அண்டு ரோல் இசை வடிவத்திலிருந்து உருவான மக்களின் பரவலாக வரவேற்பைப் பெற்றபரவலான இசை வடிவமாகும்.
இசைப்பேரறிஞர் விருது சென்னையிலுள்ள தமிழ் இசைச் சங்கம் ஆண்டுதோறும் சிறந்த இசைக் கலைஞர்களுக்கு பொற்பதக்கம், பொன்முடிப்பு என்பவற்றுடன் வழங்கும் விருதாகும்.
மூக்கன்பறவை ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ கூடப் பயணத்தை முறிக்காமல் இடைவிடாது தொடர்ந்து எட்டு நாட்கள் வரை பறக்கும்.
விழித்திரையும் விழி நரம்பும் மூளையின் முளைய விருத்தியின் போது வெளிவளர்ச்சிகளாக உருவாவதால் அவை மைய நரம்பு மண்டலமாக கொள்ளப்படுகின்றது.
1774ல் இங்கிலாந்து நாட்டின் வேதியியலாரான சோசப்பு பிரீசிட்லிஆக்சிசனைக் கண்டுபிடித்ததாக வெளியிடப்பட்டிருந்தாலும் அதற்கு முன்னரே காரல் வில்லெம் சீலெ (C .W .Scheele) என்ற சுவீடன் நாட்டு வேதியியலார் 1772 ல் இவர் ஆக்சிசனை கண்டறிந்தார்.
உமாமி சுவை என்பது குளூட்டாமேட் என்னும் வேதியியல் பொருளை நாவில் உள்ள சுவைமொட்டுகள் உணர்வதால் ஏற்படும் சுவை என்று 1908 இல் கிக்குனே இக்கேடா கண்டுபிடித்தார்.
ஏபெல் பரிசு 2003ம் ஆண்டிலிருந்து நார்வே நாட்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் விளங்கிய நீல்ஸ் ஹென்றிக் ஏபெல் என்பவரின் நினைவாக நார்வே அரசினரால் வழங்கப்படும் ஒரு சிறப்பு விருதாகும்.
கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த பல்கலைத்திறனாளரான மயன் கணிதத்திலும் திறமையாயிருந்தார்.
ஏரிஸ் சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகப் பெரிய குறுங்கோள் ஆகும்.
கறுப்புச் சாவு (Black Death) என்பது 1348 தொடக்கம் 1350 வரை ஐரோப்பாவில் பரவி ஐரோப்பிய மக்கள் தொகையில் 30 முதல் 60 விழுக்காடு வரையான மக்களைக் கொன்ற ஒரு தொற்று நோய் ஆகும்.
வித்வான்சாக், திருச்சி போர்த் தளவாடத் தொழிற்சாலையால் தயாரிக்கப்பட்ட 2,000 மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கக் கூடிய குறித் துப்பாக்கி ஆகும்.
பீமன் சிலந்தி (golden silk orb-weavers) வகையைச் சேர்ந்த 165 மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த நெஃபிலியா ஜீராசிக்கா எனும் சிற்றினம் இதுவரை கிடைத்த சிலந்தி புதைபடிமங்களிலேயே பெரியதாகும்.
புவித் திணிவு (M⊕) என்பது புவியினது திணிவை ஒத்த ஒரு அலகு ஆகும். இது 5.9737 × 1024கிகி க்குச் சமனானது.
மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி 1268 - கி.பி 1311) ஆட்சியில் பாண்டிநாடு உலகெங்கும் இல்லாத அளவுக்கு சிறப்பான நாடாக இருந்ததாக மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய வணிகர் குறிப்பிடுகிறார்.
உலகில் இதுவரை 14 குவளைகளே காணப்படும் எட்விக் கண்ணாடிக் குவளை (Hedwig glass) சிலேசிய இளவரசியான புனித எட்விக்கின் (1174–1245) பெயரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.