விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு/2006விக்கிப்பீடியாக்களின் தர ஆழம்விக்கிப்பீடியாக்களின் தர ஆழம் குறித்த வரையறையும் புள்ளி விவரங்களும் மேல்-விக்கிப் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. இந்த முறையின் துல்லியம் கேள்விக்குரியது என்றாலும், நமக்கு மேல் கட்டுரைகளை கொண்டிருக்கும் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களை காட்டிலும் தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் அதிகமாகவே உள்ளது. அது மட்டுமன்றி 10,000 கட்டுரைகளுக்கு கீழும் நம்மை விட அதிகமாகவும் கட்டுரைகளை கொண்டுள்ள விக்கிப்பீடியாக்களிலும் afrikaans விக்கிப்பீடியா மட்டுமே சற்று அதிக தரத்தில் உள்ளது. நம்மை காட்டிலும் மிகக் குறைந்த கட்டுரைகளை கொண்டுள்ள மலையாள விக்கிப்பீடியா நம்மை விட அதிக தரம் கொண்டதாய் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால், மலையாள விக்கிப்பீடியாவை நான் பார்வையிட்டவரை பக்கங்களில் அவ்வளவு உள்ளடக்கம் காணப்படவில்லை. பல சிறிய தொகுப்புகளை அவர்கள் செய்திருக்கக் கூடும். இந்த நிலையில், தொடர்ந்து நாம் தரத்தில் கவனம் செலுத்தி முன்னிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.--Ravidreams 11:18, 20 டிசம்பர் 2006 (UTC) ஆகஸ்ட்டு மாதம்: தமிழ் விக்கியின் தரம்ஆகஸ்ட் 2006க் கான தரம் பற்றிய அளவீட்டின் படியும் நாம் முன்னணியில் இருகின்றோம். ஆனால் தெலுங்கு விக்கி கட்டுரை எண்ணிக்கையில் மிக முன்னேறி உள்ளது (14000+), வங்காளி மொழி (9500+), மராத்தி மொழி (5400+). கன்னடமும் பிற இந்த்ய மொழிகளும் மிக விரைந்து வந்து கொண்டிருக்கின்றன. கட்டுரை எண்ணிக்கை பெரும் பொருட்டு இல்லை என்றாலும், தமிழ் பின்னைடைந்து கொண்டு வருகின்றது. மொத்த பைட் அளவிலே நாம் 16 M (மற்ற இந்திய மொழிகளைக்காட்டிலும் அதிகம்), மற்றும் பிற தரம் அளவீடுகளிலும் முன்னணியில் இருக்கின்றோம் (ஆனால் நம் முன் வீச்சு குறுகி வருகின்றது).
--C.R.Selvakumar 22:38, 24 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா ரவியின் கருத்துக்கள்
ரவி, கருத்துக்களுக்கு நன்றி. த.வியை உரமுடன் வளர்க்க இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. இன்னும் நிறைய பயனர்கள் வரவேண்டும். அடிப்படையாக எழுத வேண்டியவை இன்னும் மிக ஏராளமாய் இருக்கின்றன, இருக்கும் பயனர்களாவது, ஒரு நாளைக்கு 2-3 குறுங்கட்டுரையாவது எழுத வேண்டும். விடுமுறை நாட்களில் 4-5 கட்டுரைகள் எழுத வேண்டும். இக்கட்டுரைகளில் ஒரு படம் + 4-5 வரிகள் இருந்தாலும் போதும். எல்லோராலும் மயூரநாதனைப் போல கட்டுக்கோப்பாக ஒருமுனைப்புடன் எழுத இயலாவிட்டாலும், சுந்தரைப் போல அறிவுக்கு கிளர்ச்சியூட்டும் கருத்துக்களை பற்றி எழுதாவிட்டாலும். அடிப்படையான செய்திகள் எழுத ஏராளம் உள்ளன (20-30 ஏரிகள், 20-30 மலைகள், 30-40 நாடுகள், 30-40 பூச்சிகள், பூரான்கள், 30-40 விளையாட்டுகள், நூற்றுக்கணக்கான அறிவியல் கருத்துக்கள், நூற்றுக்கணக்கான கலை பற்றிய கருத்துக்கள்...). இப்பொழுதுள்ள பயனர்கள் மிக அருமையாக பணியாற்றுகிறார்கள். பாராட்டுகள்! தொடர்ந்து பணியாற்றி பயன் பெருக்குமாறு அனைவர் சார்பிலும் வேண்டிக்கொள்ளுகிறேன்.--C.R.Selvakumar 01:02, 25 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா செல்வாவுக்கு மறுமொழியும் வேண்டுகோளும்அடிப்படையாக எழுதப்பட வேண்டியவை இன்னும் ஏராளமாக இருக்கின்றன. உண்மைதான் செல்வா. முக்கிய விடயங்கள் தொடர்பான பட்டியல்களை உருவாக்கிப் பின்னர் அவை எல்லாவற்றையும் பற்றிய கட்டுரைகளை உருவாக்க நாம் முயலலாம். இப்பொழுது டெரன்ஸ் நாடுகள் பற்றியும் சிந்து கருநாடக இசை தொடர்பாகவும் நற்கீரன் தமிழர் வாழ்வியல் தொடர்பாகவும் எழுதி வருகின்றனர். நான் நாட்கள் மற்றும் ஆண்டுகளை முடித்துக் கொண்டு நோபல் பரிசு பெற்றவர்களைப் பற்றிச் செய்ய உத்தேசம். நேரந்தான் கிடைப்பதாயில்லை. அவசியமாக உடனடியாகத் தொடங்குவதற்கு ஒரு 20,000 தலைப்புக்கள் வரை உள்ளன. யாராவது ஒருவர் மொழிகள் பற்றித் தொடங்குவது மிக அவசியம். துறைசார் அறிவுடைய செல்வா தொடங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி. --கோபி 15:36, 25 செப்டெம்பர் 2006 (UTC) நற்கீரனின் கருத்துக்கள்செல்வா தகவல்களுக்கு நன்றி. உங்களை போன்ற அறிவும், அனுபவமும், ஈடுபாடும் கொண்ட பிற பல பயனர்கள் த.வி க்கு பங்களிக்க முன்வரவேண்டும். ரவி, கோபி தரம் தொடர்பாக எடுத்துவரும் கவனம் பாரட்டுக்குரியது. குறிப்பாக கோபி பல தேவையற்ற பக்க வழிமாற்றங்களை நீக்குவது நன்று. சுந்தரின் உவமையான இலக்கணத்துக்கமைந்த நிரல் போன்று ஒரு த.வி கட்டுரையில் இருக்கவேண்டிய அடிப்படைக் கூறுகளை நாம் வரையறை செய்வது த.வி தரத்தைப் பேண உதவும். --Natkeeran 01:07, 25 செப்டெம்பர் 2006 (UTC) ஆகஸ்ட் 2006 புள்ளிவிபரப் பகுப்பாய்வுஇன்னொரு புள்ளிவிபரப் பகுப்பாய்வு தமிழ் விக்கிப்பீடியா புள்ளிவிபரங்கள்
C.R.Selvakumar அவர்களின் இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் ஒப்பீடுஅண்மையில் தந்துள்ள 'சூன் புள்ளி விவரத்தின் படி, தமிழானது இந்திய மொழிகளில் முதலாவதாக உள்ளது. கட்டுரை எண்ணிக்கையில் மராத்தியும், மிக அண்மையில் வங்காளி மொழியும் நம்மைத்தாண்டி சென்றுள்ள போதும், விக்கியின் தர மதிப்பீடுகள் யாவற்றிலும் தமிழே முதலாவதாக உள்ளது. கட்டுரை எண்ணிக்கையில் முன்னே நிற்கும் மராத்தி விக்கியின் அளவு 5.5M , தமிழ் விக்கியின் அளவு 13M. வங்காளி மொழி மிக விரைந்து கட்டுரை எண்ணிக்கையில் வளர்ந்து இருந்த போதும் அதன் அளவு 4.1M தான். பிற எல்லா வகையான தரம் மதிப்பிடும் அளவீடுகளிலும் தமிழே முன் நிற்கின்றது. நாம் இன்னும் பன்முக வளர்ச்சி பெறவேண்டியுள்ளது. இடைவிடாது கூடி உழைத்தால் தமிழ் விக்கி முதல் 20-30 மொழிகளில் ஒன்றாகவும், மிகச்சிறந்த விக்கிகளில் ஒன்றாகவும் வர வாய்ப்புண்டு. மிகு பயனளிக்க வல்ல ஒரு ஆக்கம். அறிவுக்கோயில்களாக எழுப்பலாம். பன்முறை சொல்லிய செய்திகள் சரிதானா, இன்னும் சிறப்பாகச் சொல்லுவது எப்படி, இன்னும் பயனுடைய கருத்துக்கள் சேர்ப்பது எவ்வாறு, இன்னும் என்னென்ன படங்கள், சமன்பாடுகள், வெளியிணைப்புகள், உள் சுட்டிகள் தரலாம் என விடாது எண்ணி மெருகேற்றினால், மிகச்சிறந்த படைப்பாக இது அமையும். ஒரு கோயிலைப்போலவே பல்லோருடைய கூட்டுழைப்பால் எழுந்த ஒரு பயன்மிகு ஆக்கமாய் இது விளங்க வல்லது.--C.R.Selvakumar 00:41, 1 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா கீழ்க்காணும் 'சூன் மாதத்திற்கான புள்ளி விவரத்தைப் பார்க்கவும்.
இது நமது விக்கியை மென்மேலும் வளர்த்தெடுக்க ஊக்கம் தருவதாய் உள்ளது. மேலும் முனைப்புடன் செயல்படுவோம். -- Sundar \பேச்சு 07:28, 1 ஆகஸ்ட் 2006 (UTC) தமிழ் விக்கிப்பீடியா புள்ளிவிபரங்கள்
கருத்துக்கள்
விக்கிப்பீடியா தரம் உள்ளடக்கம் நோக்கி பயனர்கள் கருத்துக்கள்வலைப்பதிவுகளிலும், பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றிலும் ஒருவர் தனது சொந்தக் கருத்துக்களை எழுதலாம். ஆனால், விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத் திட்டம் அங்கீகரிக்கப்பட்ட அறிவுத் திரளை மக்களுக்குக் கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டது. சொந்தக் கருத்துக்களும் அபிப்பிராயங்களும் இதில் இடம் பெறுவதில்லை. இதனால், வேறு சொற்கள் பயன்பாட்டில் இல்லாதபோது தவிர, இருக்கும் சொற்களுக்கு மாற்றாக அங்கீகாரம் பெறாத புதுச் சொற்களைப் பயன்படுத்துவது கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து. Mayooranathan 09:32, 17 பெப்ரவரி 2006 (UTC) தமிழ் விக்கிப்பீடியாவும் கூகுலும்wikipedia என்ற keyword கொண்டு தேடினால் தமிழ் விக்கிப்பீடியா தளம் கூகுல் தேடல் முடிவுகளில் 4வது விடையாக வருகிறது. ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு அடுத்து நம் விக்கிப்பீடியா தான் உள்ளது. மற்ற மொழி பதிப்புகள் எல்லாம் அடுத்து தான் வருகின்றன. இதன் மூலம் ஆங்கில விக்கிப்பீடியாவைத் தேடும், இதுவரை தமிழ் விக்கிப்பீடியாவை கவனித்திராத, தமிழர்கள் நம் தளத்துக்கு வரும் வாய்ப்புண்டு. இது, ஆச்சரியமான ஒன்று தான். இத்தனைக்கும், என்ற சொல் கூட நம் முதல் பக்கத்தில் இல்லை. ஒரு வேளை தமிழ் விக்கிப்பீடியாவின் Pagerank அதிகமாக உள்ளதா? அறிந்தவர் விளக்கலாம். எனினும், தேடு பொறிகளுக்கு விளங்கும் வகையில் நம் பக்கங்களை வடிவமைப்பதில் நாம் எடுத்துக் கொண்ட கவனம் பயன் தரத் தொடங்கியிருப்பது கண்டு மகிழ்ச்சி. மேலும், மயூரநாதன் கூகுலில் தமிழ் விக்கிப்பீடியாவின் குறித்து எனக்கு தனி மடலில் தெரிவித்த ஆர்வமூட்டும் கவனிப்புகளையும் கீழே தருகிறேன். There are indications that the Tamil wikipedia is on the path to becomes the single most sourse of information in Tamil. Recently I did a small study to findout how often Tamil wikipedia figure in the searches through search engins. I used 100 randomly selected Tamil words in google search. In 30% instances TW figured first in the list. It appeared within first five in 63% times. 75% of the times it came within first 10, and 85% times within 20. This shows that there are very high percentage of chances for an infi\ormation seeker inTamil to end up in TW. Therefor we need to be more responsible in developing Tamil Wikipedia. --ரவி 12:00, 9 ஜூன் 2006 (UTC) கூகிள் தேடுபொறி விக்கிப்பீடியாவை அநேகமாக முதலாவது அல்லது இரண்டாவதாகப் போடுகின்றது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று தலையங்கமே தமிழில் அமைவதும் அதன் URL (Uniform Resource Locator) தமிழில் அமைவதே அத்துடன் நடுநிலைப் போகும் காரணமாக அமைகின்றது. கட்டுரையின் அளவை மாத்திரம் கூகிள் தேடுபொறி தேடும் என்ற அவசியம் இல்லை. தற்சமயம் கூகிள் தேடுபொறியானது 150 இற்கும் மேற்பட்ட விதிகளைப் பாவித்து மிகப் பொருத்தமான ப்க்கத்தைக் கண்டுபிடிக்கின்றது. எனவே ஒருவரிக் கட்டுரைகள், மீள்வழிநடத்தற் பக்கங்கள் இவற்றை நீக்குவதால் பெரிதாகப் பலனேதும் இல்லை. எனினும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்தே. மீள்வழிநடத்தற் பக்கங்கள் கூகிள் தேடுபொறிமூலம் தேடும்போது கிடைக்க வாய்ப்புள்ளது இவ்வாய்ப்பை நாம் மீள்வழிநடத்தல் பக்கங்களை அழித்தால் கிடைக்காமற் போய்விடும். தகவற் தொழில் நுட்பத்தில் பல கட்டுரைகள் எழுதப் படவேண்டும். மருத்துவம் சம்பந்தமாக விரல் விட்டு எண்ணக்கூடிய கட்டுரைகளேயுள்ளன. கட்டிடக் கலை தொடர்பாக ஆரம்பம் முதல் சிறப்பாக கட்டுரைகளை மயூரநாதன் வழங்கி வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் இன்னமும் 1000இற்குக் குறைவான பயனர்களேயுள்ளனர் எனவே நாம் புதிய பயனர்களைப் பெறுவதிலும் கட்டுரைகளை அதிகரிப்பதிலும் அவற்றை மேம்படுத்துவதிலும் கூடுதலாகக் கவனம் செலுத்தவேண்டும். --Umapathy 01:12, 25 செப்டெம்பர் 2006 (UTC)
தரமுயர்த்தல் கண்காணிப்பு கூறுகள்அதிகாரப்பூர்வ விக்கிப்பீடியா புள்ளிவிவரங்கள், ஒரு விக்கிப்பீடியாவின் தரம் எவ்வறு கண்காணிக்கப்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ள உதவுகிறது. தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் உயர்த்த ஒவ்வொரு பங்களிப்பாளரும் எளிதில் ஆற்றக்கூடிய சில பணிகள்:
--ரவி 12:00, 9 ஜூன் 2006 (UTC) தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள்/மக்கள் எண்ணிக்கை கணிப்பீட்டில் அடிமட்டத்தில்en:Wikipedia:Wikipedia articles per population தமிழ் மொழி விக்கிப்பீடியாவும் பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களும்தமிழ் இந்திய மொழிகளில் இப்பொழுது இரண்டாவதாக உள்ளது. வங்காள மொழியும் கன்னட மொழியும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன (கட்டுரை எண்ணிக்கையில்). அடிப்படையான அளவீடுகளின் படி தமிழே முதலாவதாக இது வரையிலும் இருந்து வருகின்றது. அனால், கன்னடத்திலும் மிக அழகாக செய்திருப்பது போலத் தெரிகின்றது (எனக்கு கன்னடம் படிக்கத் தெரியாது, ஆனால் ஓரளவு எழுத்துக்கூட்டி மிக மிக மெள்ள சில வரிகள் படிக்க முடியும்). முன்னணியில் நிற்கும் மராட்டி மொழிக்கும் தமிழுக்கும் சுமார் 1000 கட்டுரைகள் வேறுபாடு உள்ளது. ஆனால் மராட்டிய மொழியில் தரமான வளமான கட்டுரைகள் குறைவு. கருத்துப் பரவலும் குறைவு. பல இந்திய மொழிகளும் கிரிக்கெட் வீரர்களையும், திரைப்படம் பற்றியும், ஊர், மாநிலம், நாடு பற்றிய கட்டுரைகளையும் கொண்டே கட்டுரை எண்ணிக்கைகளைக் கூட்டியுள்ளன. அறிவான கருத்தூறும் ஆக்கங்கள் மிக குறைவு. இடைவிடாதும், இன்னும் தக்கார் பலரையும் கொண்டு உழைத்தால், த.வி. ஒரு சிறந்த அறிவுப் பயன் கருவூலமாகத் திகழ வாய்ப்புள்ளது. ஓரிரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு நல்ல நிலையை எட்டும் என்று எண்ணுகிறேன். இதுவரையிலும் த.விக்கு உழைத்தவர்கள் மிகச்சிறப்பாக பணியாறியிருக்கிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. இன்னும் சுமார் 100 தரமான உழைப்பாளிகள் வந்து ஆக்கங்கள் தர இயலும். தரவேண்டும். --C.R.Selvakumar 17:12, 16 ஜூலை 2006 (UTC)செல்வா
|
Portal di Ensiklopedia Dunia