விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சிதமிழ் இணையக் கல்விக்கழகம் (த. இ. க.) முன்னெடுக்கும் திட்டங்களில் ஒன்றான மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி அளித்தல் குறித்தான தகவல்கள் இங்கு தொகுக்கப்படுகின்றன. திட்டத்தின் வேரினைப் பற்றி அறிந்துகொள்ள இங்கு சொடுக்கவும். பயிற்சியின் உள்ளடக்கம்தமிழ்நாடு, மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் தமிழ் இணையக் கல்விக்கழகமும் இணைந்து ஆசிரியர்களுக்கான அடிப்படைக் கணினிப் பயிற்சி, மென்பொருட்கள் பயிற்சி, தட்டச்சுப்பயிற்சி, விக்கிப்பீடியாவில் தொகுத்தல் பயிற்சி ஆகிய பயிற்சிகளைத் தருகின்றன. கால அட்டவணைஇப்பயிற்சித் திட்டமானது 2015ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆறுகட்டங்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் கீழே:
@சக்திகுமார் லெட்சுமணன், Srithern, Balurbala, Info-farmer, Booradleyp1, தென்காசி சுப்பிரமணியன், and கி.மூர்த்தி: முதலியோருக்கு வேண்டுகோள்: இப்பயிற்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று நாட்கள் நடக்கின்றது. இரண்டு நாட்கள் கல்வித்துறையின் வழமையான பயிற்சி. மூன்றாவது நாளின் பெரும்பகுதி விக்கிப்பீடியா பயிற்சிக்கு. இந்த மூன்றாவது நாள் என்பது நம்மைப் போன்ற விக்கிப்பீடியர்கள் என்று வந்து பயிற்சி அளிக்க முடிகிறதோ அதற்கேற்ப முதல் நாளாகவோ இரண்டாவது நாளாகவோ மூன்றாவது நாளாகவோ அமையும். எனவே, ஒரு பயனர் அருகருகில் உள்ள மூன்று மாவட்டங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் பயிற்சி அளிக்க முடியும். இயன்றவர்கள் தத்தம் ஊருக்கு அருகில் உள்ள மாவட்டங்களுக்குச் சென்று ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டுகிறேன். விக்கிப்பீடியர்கள் நேரடியாக கலந்து கொண்டு பயிற்சி அளித்தால் மட்டுமே இந்த வாய்ப்பினைச் சிறப்பாகப் பயன்படுத்த முடியும். இதற்கு முன் இத்தகைய பரப்புரைகளுக்குச் சென்றதில்லையே என்ற தயக்கமும் வேண்டாம். உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லித் தந்தால் போதும். பங்கேற்பாளர்களுக்குப் பயனர் கணக்கு உருவாக்கி மணல் தொட்டியல் எழுதுதல், படம் ஏற்றும் பயிற்சி, கலைக்களஞ்சிய முக்கியத்துவம் உள்ள தலைப்புகளில் எப்படி நம் நடைக்கு ஏற்ப எழுதுவது என்பன போன்ற அடிப்படையான விசயங்களைச் சுட்டினால் போதும். இயலும் எனில் என்னையோ பார்வதியையோ தொடர்பு கொள்ளுங்கள். நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அனைத்துச் செலவுகளும் ஏற்பாடுகளும் தமிழக கல்வித் துறையால் பொறுப்பேற்கப்படும். --இரவி (பேச்சு) 13:55, 1 நவம்பர் 2015 (UTC) இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட விக்கிப்பீடியா பயிற்றுநர்களின் பெயர்கள் கிடைக்கத் தாமதமானதால் ஆசிரியர்களையே நியமித்துள்ளனர். இதில் தமிழ்ப்பரிதியும் இயன்றவரை அனைத்து மாவட்டங்களுக்கும் செல்கிறார். எனவே ஆறாம் தேதி. வெல்லூர் மற்றும் திருவண்ணாமலைக்கு ஆட்கள் தேவை. திருவண்ணாமலைக்கு ஸ்ரீதர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். வேலூரில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தெரிவிக்கவும். வழமையான விக்கிப்பீடியா பட்டறைகள் போல பார்வையாளராகச் செல்ல முடியாது என்பதை நினைவில் கொள்க. முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:35, 1 நவம்பர் 2015 (UTC)
16.11.2015
17.11.2015
18.11.2015
19.11.2015
20.11.2015
24.11.2015
25.11.2015
23 நடந்த நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள்தருமபுரி மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
சேலம் மாவட்டம்
கரூர் மாவட்டம்
தேனி மாவட்டம்
திருச்சி மாவட்டம்
ஈரோடு மாவட்டம்
நாமக்கல் மாவட்டம்
கோவை மாவட்டம்
நீலகிரி மாவட்டம்
விழுப்புரம் மாவட்டம்
வேலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்
சிவகங்கை
புதுக்கோட்டை மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டம்
திருப்பூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
தூத்துக்குடி
இராமநாதபுரம் மாவட்டம்
சென்னை மாவட்டம்
மதுரை மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம்
கிருட்டிணகிரி மாவட்டம்
![]() |
Portal di Ensiklopedia Dunia