விக்கிப்பீடியா:மொழிபெயர்ப்பாளர்

உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவியினைப் பயன்படுத்துவர்கள் கவனிக்க வேண்டியவை

அணுக்கம் பெறுவதற்கான தகுதி

அனைத்துப் பயனர்களும் இந்த அணுக்கம் பெற விண்ணப்பிக்கலாம். ஆனால், கீழ்க்கானும் அடிப்படைத் தகுதிகளை அவர்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

புதிய பயனர்கள்

மூன்று கட்டுரைகளை இந்தக் கருவி கொண்டு உருவாக்கி கட்டுரையின் தலைப்புகளைக் குறிப்பிட்டு இங்கு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பு: * விண்ணப்பிக்கும் காலம் வரையில் இந்தக் கருவியினைப் பயன்படுத்தாதவர்கள் (தொடர்பங்களிப்பாளர்கள், நிருவாகிகள், அதிகாரிகள் உட்பட) இந்தக் கருவியினைப் பொருத்தமட்டில் புதிய பயனர்கள் எனப்படுவர்.

ஏற்கனவே கருவியினைப் பயன்படுத்தியவர்கள்

ஏற்கனவே கருவியினைப் பயன்படுத்தியவர்கள் எனில் அவர்கள் உருவாக்கிய மூன்று கட்டுரைகளை முன் வைத்து அணுக்கம் கோரலாம். ஆனால் அவர்கள் இதற்கு முன்னர் உருவாக்கிய கட்டுரைகளின் தரமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

கால அளவு

விண்ணப்பிப்பவர்களின் பங்களிப்புகளைச் சீர்தூக்கிப் பார்த்து, பலரும் தங்கள் கருத்துக்களைப் பகிரப் போதிய அவகாசம் தரும் வகையிலும், மொழிபெயர்ப்பாளர் அணுக்கத்தைத் தரும் முடிவை நிருவாகிகள் எடுப்பதற்காகவும், விண்ணப்பிக்கும் நாளில் இருந்து ஒரு வார காலம் அவகாசமாக எடுத்துக்கொள்ளப்படும்.

அணுக்கம் வழங்கல்

நிருவாகிகள் மற்ற பயனர்களின் கட்டுரையின் தரத்தினைச் சரிபார்த்த பிறகு அணுக்கம் வழங்குவர். ஒரு நிருவாகியின் கட்டுரையினை மற்ற நிருவாகி சரிபார்த்து வழங்குவர்.

அணுக்கம் மீளப் பெறுதல்

அணுக்கம் பெறப்பட்ட பிறகு பயனர்கள் உருவாக்கும் கட்டுரையானது விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு (விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை, விக்கிப்பீடியா:அடிப்படைக் கட்டுரை அமைப்பு ...) முரணாக இருக்கும் சமயத்தில், தொடர்ந்து மூன்று எச்சரிக்கைக்குப் பிறகும் அதே நிலை தொடருமானால் தகுந்த உரையாடலுக்குப் பிறகு அணுக்கம் மீளப் பெறப்படும்.

வார்ப்புருக்கள்

இற்றை செய்யப்படும்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya