விக்கித்திட்டம் சென்னை தங்களை அன்புடன் வரவேற்கிறது.
இத்திட்டம் சென்னை தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.சென்னை துறைசார் வல்லுனர்களும், ஆர்வலர்களும், மாணவர்களும் இத் திட்டத்தில் சேர அழைககப்படுகின்றனர். அவர்களுக்கு வழிகாட்டி உதவி புரியவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.
தாங்களும் இத்திட்டத்தின் கீழ் இணைந்து சென்னை துறையை மேம்படுத்த இயலும், அதற்கு இங்குள்ள 'திட்ட உறுப்பினர்கள்' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளவும். பின் சென்னை தொடர்பான கட்டுரைகளை இயற்றலாம், உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும்.
நோக்கம்
நமது விக்கித்திட்டம் சென்னையின் குறிக்கோள்:
சென்னை தொடர்பான கட்டுரைகளின் உருவாக்கி தொகுத்து அளவினையும் தரத்தினையும் அதிகரித்தல்.
கட்டுரைகளை எளிய தேடலின் பொழுதே ஆர்வமுள்ளோருக்கு கிடைக்க வழிவகை செய்தல்.
சென்னை தொடர்பான கட்டுரைகளில் சமீபத்தில் பயனர்கள் செய்துள்ள மாற்றங்கள் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளோர் இப்பட்டியலில் பிற பயனர்கள் செய்த மாற்றங்களை கண்காணிக்கலாம்.
வார்ப்புருக்கள்
பயனர் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புருக்கள் மற்றும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இட வேண்டிய சென்னை வார்ப்புருக்கள் குறித்து இங்கு காணலாம்.
துணைத்துறைகள்
சென்னையின் துணைத்துறைகள் எவையென பார்வையிட வேண்டுமெனில் இங்கு செல்லவும்.
சென்னைக்கான இந்த விக்கித் திட்டம் புதியது என்பதை மனதில் கொண்டு முதலில் இத்திட்டத்தை சீராக்க வேண்டும்.
சென்னை தொடர்பான கட்டுரைகளை கண்காணிக்க வேண்டும்.
அவற்றின் வளர்ச்சியில் பெரிதும் பங்களிக்க வேண்டும்.
விக்கிப்பீடிய நடைமுறைகளுக்கு ஏற்றவாறு சீரமைக்கப்பட வேண்டிய ஒவ்வொரு கட்டுரையையும் சீரமைக்க வேண்டும்.
பங்காற்றும் வழிகள்
சென்னை பற்றிய கட்டுரைகளை மூன்று வரிகளுக்கும் மேல் குறுங்கட்டுரைகளாகவாவது இயன்றவரை உருவாக்கலாம். தக்க ஆதாரங்களை இணைத்து சிறப்பான கட்டுரையாக்குதல் மேலும் சிறப்பு.
சென்னை தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி சிறப்புக் கட்டுரைகளாக மாற்றலாம்.
ஏற்கனவே உள்ள சென்னை கட்டுரைகளில் உள்ள பிழைகளை திருத்தலாம்.
இன்றே உங்கள் சென்னைத் துறைக் கட்டுரையைத் தொடங்குங்கள்!'
இலக்குகள்
உடன் செய்ய வேண்டியவை
தேவையான கட்டுரைகளை அடையாளங்கண்டு வேண்டிய கட்டுரைகள் என்பதில் இணைக்க வேண்டும். பின் அதிலுள்ள கட்டுரைகளை மூன்று வரிகளுக்கும் மேல் குறுங்கட்டுரைகளாகவாவது இயன்றவரை உருவாக்க வேண்டும். எதுவும் இன்றி இருப்பதற்கு குறுங்கட்டுரையாக இருப்பது மேல் அல்லவா!.
விக்கித்திட்டம் சென்னையின் கீழுள்ள கட்டுரைகளை சிறந்த கட்டுரை, மேம்படுத்த வேண்டியவை, குறுங்கட்டுரை என பகுப்புகளாக பிரிக்க வேண்டும்.