மொழியியல், கணினியியல் தொடர்பான கட்டுரைகள் எனக்கு விருப்பமானவை. எனினும், அனைத்து விதமான தலைப்புகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். எங்கேனும் பிழையிருந்தால் மன்னியுங்கள். மொழிபெயர்ப்பதும், எழுத்துப்பிழைகளைத் திருத்துவதும், உரை திருத்துவதும், பகுப்புகள் சேர்ப்பதும், இடையிணைப்புகளை சேர்ப்பதும் எனது குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்.
புதிய தொழினுட்பங்கள் உடனுக்குடன் தமிழில் வெளிவர வேண்டும். ~தமிழால் இணைவோம்~
உலகப் பண்பாடுகள், அறிவியல், கலை, இலக்கியம் என அனைத்தும் தமிழில் எழுதப் பட வேண்டுமென்று விரும்புகிறேன்.
இந்தியாவின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக தமிழ் இருக்க வேண்டும். அதனை முன்னிறுத்தி, இந்தியா தொடர்பான அனைத்து புவியியல் கட்டுரைகளையும் தமிழ் விக்கிப்பீடியா கொண்டிருக்க வேண்டும்.
நான் என் தாய்மொழியை விரும்புகிறேன். அதனால் தமிழில் பேசுகிறேன். நீங்கள்??
வணக்கம், தமிழ்! இந்த நிமிடம் வரை 1241 கட்டுரைகள்..! தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகள்! 'ஆயிரவர்' பதக்கத்தினை உங்களின் பயனர் பக்கத்தில் பதிவு செய்துள்ளேன். அன்புடன், மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:50, 19 சனவரி 2014 (UTC)
விக்கி துப்பரவில் உங்களின் இமாலய வேகம் மலைக்கவைக்கிறது. ஏறேக்குறைய அனைத்து புதிய கட்டுரைகளிலும் கடைசி தொகுப்பு உங்களுடையதே :) அராபத் (பேச்சு) 16:30, 22 ஏப்ரல் 2013 (UTC)
தமிழ்க்குரிசில், உங்கள் தொடர் பங்களிப்புகளைக் காணும் போது, தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்கிறீர்கள் ! உங்கள் தாய் இப்பொழுதே ஈன்ற பொழுதின் பெரிதுவக்கலாம் ! தொடர்க உங்கள் சீரிய பங்களிப்பு ! இரவி (பேச்சு) 14:58, 18 பெப்ரவரி 2013 (UTC)
என்ன ஒரு நளினம்... அனைவரிடமும் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்ளும் ஒரு அன்பரைக் கண்டு வியக்கிறேன்! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:28, 24 அக்டோபர் 2012 (UTC)
நீங்கள் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய பல்வேறு நடைமுறைகளையும் ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து பங்களித்து வருவதைக் கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து பயனுற பங்களிக்க வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 21:14, 1 சூலை 2012 (UTC)
ஆர்வமுள்ள புதுப்பயனர் பதக்கம்
உங்களது ஆர்வமும் பங்களிப்புகளும் அருமை. எனவே, உங்களுக்கு இப்பதக்கத்தைக் கொடுத்து மகிழ்கிறேன். உங்களது சீரிய பணி சிறக்க வாழ்த்துகள். நன்றி!
தங்களுக்குக் கிடைத்த உதவித் தொகையைப் பயன்படுத்தி மிகச் சிறப்பான பங்களிப்புகளை நல்கி வருவதைப் பாராட்டி இப்பதக்கத்தை அளித்து மகிழ்கிறேன். உங்கள் முன்மாதிரிப் பங்களிப்புகளைச் சுட்டி தேவையுள்ள இன்னும் பலருக்கும் இது போன்ற உதவித் தொகை திட்டம் சென்றடைய முனைகிறேன். நன்றி. இரவி (பேச்சு) 22:02, 6 செப்டம்பர் 2014 (UTC)
தமிழ்க்குரிசில் அண்ணா அவர்களே!, தாங்கள் இவ்வரிய திட்டத்தில் தங்கள் பங்களிப்பைச் செலுத்தும் முகமாக 100 தொகுப்புக்களை மேற்கொண்ட பயனர்களுள் ஒருவராகத் திகழ்வது எமக்கு மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் பங்களிப்பைக் கௌரவிக்கும் முகமாக இப்பதக்கைத்தை தங்களுக்கு அளிக்கின்றோம், தங்கள் சீரிய சிறப்பான தொகுப்புக்கள் மேலும் தொடர எம் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்! என்றென்றும் அன்புடன் தமிழ் விக்கிப்பீடியர்கள்!...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:11, 1 சனவரி 2015 (UTC)
தமிழ் விக்கியில் 2000 கட்டுரைகள் எழுதியதற்காக எனது பாராட்டுக்கள். --AntanO 19:13, 20 செப்டம்பர் 2015 (UTC)
மூவாயிரவர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவில் மூன்று ஆயிரம் கட்டுரைகளைப் உருவாக்கியதற்காக இந்த சிறப்புச் சான்று. வாழ்த்துக்கள்! மிகவிரைவில் 4000 ஐ எட்டிவிடுவீர்கள்!! --AntanO 19:13, 20 செப்டம்பர் 2015 (UTC)
வாழ்த்துகள் தமிழ்க்குரிசல் ! எண்ணிக்கையை எட்டி விட்டீர்கள் ! எண்ணியதையும் முடித்து விடுங்கள் !!--மணியன் (பேச்சு) 08:11, 21 செப்டம்பர் 2015 (UTC)
நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)