விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கிப் பயனர்களும் ஒன்று கூடி உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் எண்ணமாகும். 2016 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கி மாரத்தான் பற்றிய விவரங்களைக் கீழே காணலாம்.
நோக்கம்
பழைய பயனர்கள் உற்சாகத்தோடு பங்களிக்கவும், புதிய பயனர்களை இணைக்கவும் இது நல்லதொரு முன்னெடுப்பாகவும் வாய்ப்பாகவும் இருக்கும்.
நேரம், தேதி
சூலை 31 (ஞாயிற்றுக் கிழமை), 2016 அன்று 24 மணி நேரமும் (அவரவர் நேர வலயத்துக்கு ஏற்ப).
இடம்
உங்களுக்கு விருப்பமான இடங்களில்.
வீடு, அலுவலகம், நண்பர்கள் சந்திப்பு, கல்லூரி, தமிழ் இணையக் கல்விக்கழக அலுவலகம், கட்டற்ற மென்பொருள் கூட்டங்கள், பள்ளி ஆய்வகங்கள்.
விருப்பமான பயனர்கள் ஓரிடத்தை தேர்வு செய்து கூடலாம்.
திட்டம் / இலக்குகள்
விக்கியில் பங்களிப்பது தன்னார்வப் பணி என்பது போன்றே மாரத்தான் நிகழ்வில் கலந்துகொள்ளுதலும். பயனர்கள் தமது விருப்பமான தொகுப்புகளை இந்த நிகழ்வின்போது செய்யலாம். விரும்புபவர்கள் பின்வரும் முக்கிய இலக்குகளில் ஈடுபடலாம்:
பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். இப்போதைக்கு, தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)