விக்கிப்பீடியா பேச்சு:உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி
தேவைப்படும் மேம்பாடுகள்
ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்க்கும்போது References, Notes எனும் துணைத் தலைப்புகள், குறிப்புகள் என்று தமிழில் மொழிபெயர்ப்பு ஆகிறது. References என்பது மேற்கோள்கள் என்பதாகவும், Notes என்பது குறிப்புகள் என்பதாகவும் மொழிபெயர்ப்பு ஆக வேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:30, 17 மார்ச்சு 2024 (UTC)
ஆம். இது போன்ற மாற்றங்களை அந்த கருவியில் வர எங்கு செய்ய வேண்டும்? தந்தால் தொடர்ந்து இதுபோன்றவைகளைச் செய்ய விரும்புகிறேன். த♥உழவன்(உரை) 03:25, 19 மார்ச்சு 2024 (UTC)
திரைப்படக் கட்டுரைகள் உருவாக்கும் போது Cast எனும் துணைத் தலைப்பு அப்படியே தமிழில் காஸ்ட் என்றும் Plot என்பது சதி எனவும் Production enbathu உற்பத்தி எனவும் வருகிறது. ஆனால் அது முறையே நடிப்பு அல்லது நடிகர்கள் எனவும் மற்றும் கதைச் சுருக்கம் எனவும் மொழிபெயர்க்கப்படவேண்டும்.--Balu1967 (பேச்சு) 02:53, 19 மார்ச்சு 2024 (UTC)
கதைச் சுருக்கம் எனவும் பயன்படுத்தியிருக்கிறேன். காண்க: டம்ப் மனி. கதைக்கரு --> பேர்ள் ஆர்பர் (திரைப்படம்), திரைக்களம்' எனவும் அமைத்தேன். காண்க: தி பீகீப்பர் (2024 திரைப்படம்) எதை பயன்படுத்தலாம்? பல்வேறு கலைச் சொற்கள் இருக்கலாமா? சீர்மையாக ஒரே சொல்லினைப் பயன்படுத்தலாமா? த♥உழவன்(உரை) 03:36, 19 மார்ச்சு 2024 (UTC)
இது இயந்திரவழிக் கற்றல் முறையில் நடப்பதால் தொடர்ந்து இந்தப் பிழைகளை நீங்கள் திருத்தினாலே எதிர்காலத்தில் இக்கருவி புரிந்து கொள்ளும். இருந்தாலும் இவற்றைச் சுட்டிக்காட்ட விரும்பினால் இங்கே கருத்திடலாம். மொழிபெயர்ப்பின் தரத்தை மேம்படுத்த வாய்ப்புள்ளது.-நீச்சல்காரன் (பேச்சு) 06:27, 31 மார்ச்சு 2024 (UTC)
எழுதும் முறை
அவர் என்பதற்குப் பதிலாக இவர் என்பது பொருத்தமாக இருக்கும்.
உதாரணமாக he is a great cricketer. அவர் ஒரு சிறந்த துடுப்பாட்டக்காரர்.
இங்கு இவர் என்று தான் வரவேண்டும்.
ஆனால் இவர் என்பதையுமே பலமுறை பயன்படுத்த வேண்டாம் என கூறலாம். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 09:29, 18 மார்ச்சு 2024 (UTC)
கருவியில் தகவல்பெட்டியும் சேர்த்து மொழிபெயர்க்கப்படுகிறதா? தகவல்பெட்டி ஏன் ஒரே வரியில் அனைத்தும் சேர்ந்து வருகிறது. மொழிபெயர்ப்பவர்களே இதனை சரி செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் கட்டுரை ஒன்று எழுதினால் போதுமென்ற மனநிலையில்தான் எழுதுகிறார்கள் போல் தெரிகிறது.--Kanags\உரையாடுக 06:27, 19 மார்ச்சு 2024 (UTC)
ஆம் கருவியில் தகவல்பெட்டியும் சேர்த்து மொழிபெயர்க்கப்படுகிறது. ஒரே வரியாகவேத்தான் கொடுக்கிறது. மொழிபெயர்ப்பவர்களும் அப்படியே பதிவேற்றுகின்றனர். --கி.மூர்த்தி (பேச்சு) 06:40, 19 மார்ச்சு 2024 (UTC)
//மொழிபெயர்ப்பவர்களும் அப்படியே பதிவேற்றுகின்றனர்.// வணக்கம், காட்சித் தொகுப்பின் போது சரியாகத் தான் வரும். காட்சித் தொகுப்பின்போதும் ஒரே வரியாக வந்து அதனைப் பதிப்பித்தால் நாம் அவர்களைக் குறை கூறலாம். காட்சித் தொகுப்பில் கட்டுரை துவங்குபவர்கள் அதே காட்சித் தொகுப்பில் தான் திருத்தங்களும் செய்வர். துப்புரவு செய்பவர்கள் தான் இரண்டு தொகுப்பிற்கும் பழகிக்கொள்ள வேண்டும். உதாரணமாக நமக்கு பழைய காட்சித் தொகுப்பு (இடைமுகம்) பழக்கமாக இருந்தாலும் பரப்புரைக்காக 2022 இடைமுகத்தைப் பயிற்சி செய்து பார்த்தோம் அல்லவா அதுபோல் தான். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 10:23, 20 மார்ச்சு 2024 (UTC)
//ஏன் ஒரே வரியில் அனைத்தும் சேர்ந்து வருகிறது.// visual edit (காட்சித் தொகுப்பு) பயன்படுத்துவதால் இவ்வாறு வரும். மூலத் தொகுப்பில் திருத்தம் செய்யும் போது ஒரே வரியாக இருக்கும், திருத்தம் செய்வது கடினம். இதனைக் காட்சித் தொகுப்பில் திருத்துவது மிக எளிது. இந்தக் கருவியினைப் பயன்படுத்தாது, ஆ.வியில் (காட்சித் தொகுப்பில்) இருந்து நகலெடுத்து ஒட்டினாலும் இப்படித்தான் நிகழும்.-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 10:12, 20 மார்ச்சு 2024 (UTC)
தாவரவியல் தகவற்பெட்டிக்கான குறியீடுகள் இங்குள்ளது போல வருவதில்லை. அதற்குரிய மீடியாவிக்கிக் குறியீடுகளோடு பெரிதாக வருகிறது. மேலும் தேவையற்ற மேற்கோள் குறியீடுகள், </nowiki> போன்றவை வருகின்றன.--த♥உழவன்(உரை) 09:36, 20 மார்ச்சு 2024 (UTC)
கட்டுரையைப் பிரதியிடல்
ஒரு கட்டுரைக்கு மேல் இன்னொரு கட்டுரை எழுதப்படுகிறது. எ+கா: மணிமாலா.--Kanags\உரையாடுக 06:43, 19 மார்ச்சு 2024 (UTC)
தலைப்பு ஏற்கனவே இருந்தால், புதுக் கட்டுரையை எழுத இயலாதவாறு தடுக்கும் வகையில் தொழினுட்பத்தை இதில் கொண்டுவர வேண்டும். இது போன்ற குறைபாடுகளை எங்கு தெரிவிக்கவேண்டும் என்பதுவே எனக்குத் தெரியவில்லை! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:19, 19 மார்ச்சு 2024 (UTC)
1. //தலைப்பு ஏற்கனவே இருந்தால், புதுக் கட்டுரையை எழுத இயலாதவாறு தடுக்கும் வகையில் தொழினுட்பத்தை இதில் கொண்டுவர வேண்டும்// விக்கித்தரவில் சேர்த்தால் இந்தப் பிரச்சினை வரவே வராது.
2. ஒரு கட்டுரைக்கு மேல் இன்னொரு கட்டுரை எழுத இயலும். விக்கிச் சமூக ஒப்புதல் இருந்தால் இதனை நீக்கலாம்.
3. //இது போன்ற குறைபாடுகளை எங்கு தெரிவிக்கவேண்டும்// இங்கு
இது குறித்து ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள உரையாடல். காண்க -- நன்றி ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 09:16, 19 மார்ச்சு 2024 (UTC)
தலைப்பு ஏற்கனவே இருந்தால், தமிழில் கட்டுரை உள்ளது என்று அறிவிப்பு வருகிறது. ஆனால் தலைப்பில் சிறு வித்தியாசம் இருந்தாலும் கண்டுபிடிக்கப்படாமல் புதுக் கட்டுரையை எழுத நேர்ந்து விடுகிறது. --கி.மூர்த்தி (பேச்சு) 08:54, 19 மார்ச்சு 2024 (UTC)
மணிமாலா கட்டுரை ஏற்கெனவே விக்கித்தரவில் ஆங்கில விக்கிக் கட்டுரைக்கு இணைக்கப்பட்டிருந்தது.--Kanags\உரையாடுக 09:57, 19 மார்ச்சு 2024 (UTC)
விக்கித்தரவில் இருந்தால் தற்போதுள்ள பக்கத்தை அழித்துவிட்டு பிரசுரிக்கவும் என அறிவிப்பு வரும் அதனையும் மீறி செய்வது பயனரின் தவறு. விக்கிச் சமூக ஒப்புதல் இருந்தால் இதனைத் தடுக்கலாம். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 05:03, 20 மார்ச்சு 2024 (UTC)
ஆம், இவ்வாறான பிரதியிடலைத் தடுப்பதே நல்லது.--Kanags\உரையாடுக 10:48, 20 மார்ச்சு 2024 (UTC)
User:Sridhar GUser talk:Kanags ஆகியோருக்கு வணக்கம். உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி பற்றிய தலைப்பு என்பதால் நானும் இதில் ஒரு சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தேன். ஆனால் மணிமாலா கட்டுரை தானாகவே விக்கித் தரவில் சேர்ந்து விட்டது. மேலும் //விக்கித்தரவில் இருந்தால் தற்போதுள்ள பக்கத்தை அழித்துவிட்டு பிரசுரிக்கவும் என அறிவிப்பு வரும்// எனக் கூறியுள்ளீர்கள். ஆனால் எனக்கு அவ்வாறான அறிவிப்பு ஏதும் வரவில்லை. --Balu1967 (பேச்சு) 10:52, 20 மார்ச்சு 2024 (UTC)
எதுவாகினும் கட்டுரை உருவாக்கிய உடனேயே பக்க வரலாற்றைக் காண்பது. நல்லது என்று தோன்றுகிறது.-- சா. அருணாசலம் (பேச்சு) 11:31, 20 மார்ச்சு 2024 (UTC)
@Balu1967: ஒரு பரிந்துரை: en:Maram (film) எனும் கட்டுரையை மரம் எனும் கட்டுரைத் தலைப்பில் மொழி--Balu1967 (பேச்சு) 01:07, 23 மார்ச்சு 2024 (UTC)பெயர்ப்பு செய்து பார்க்கிறீர்களா? மரம் எனும் கட்டுரை ஏற்கனவே இருப்பதால், எச்சரிக்கை அறிவிப்பு வருகிறதா எனப் பார்ப்போம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:10, 20 மார்ச்சு 2024 (UTC)
ஏற்கனவே உள்ள கட்டுரையினை பிரசுரிக்கும் போது வரும் எச்சரிக்கை
ஏற்கனவே உள்ள கட்டுரையின் பெயரில் புதிய கட்டுரையினை வெளியிட முயன்றால் இந்தப் படத்தில் இருப்பது போன்ற எச்சரிக்கை வரும். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 18:30, 20 மார்ச்சு 2024 (UTC)
@Balu1967: எந்தத் தலைப்பில் திரைப்படக் கட்டுரையை உருவாக்கினீர்கள்? மரம் என்றா அல்லது மரம் (திரைப்படம்) என்றா? மரம் என்ற தலைப்பில் உருவாக்கினால் எச்சரிக்கை வந்ததா?--Kanags\உரையாடுக 21:39, 22 மார்ச்சு 2024 (UTC)
@Kanags: மரம் (திரைப்படம்)
என்ற பெயரில் உருவாக்கினேன்.--Balu1967 (பேச்சு) 01:07, 23 மார்ச்சு 2024 (UTC)
நந்திவர்மன் என்ற பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் இருந்ததால் நந்திவர்மன் என்ற திரைப்படக் கட்டுரையை அதேபெயரில் மொழிபெயர்த்து உருவாக்கினேன். ஸ்ரீதர் குறிப்பிட்டது போலவே தற்போதுள்ள பக்கத்தை அழித்தெழுதுக என்ற எச்சரிக்கையுடன் கைவிடு மற்றும் பரவாயில்லை, பிரசுரிக்கவும் என்பதும் வருகிறது.-- சா. அருணாசலம் (உரையாடல்) 04:03, 23 மார்ச்சு 2024 (UTC)
கூகுள் தமிழாக்கக்கப்புரைகளை மேம்படுத்தம் பணியின்போது அக்கட்டுரையை உள்ளடக்க மொழிபெயர்ப்பு கருவியில் உருவாக்கியே பழைய கட்டுரையின் மீது பிரதியிடல் செய்து மேம்படுத்தினேன். எனவே கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் மேம்பாடு திட்டம் முடியும் வரை பிரதியிடலைத் தடுக்கவேண்டாம் அல்லது என்னைப் போல பிரதியிடலை விரும்புபவர்களுக்கு மட்டும் கூகுள் தமிழாக்கக்கப்புரைகளை மேம்படுத்தம் பணி முடியும்வரை விலக்கு அளிக்க வகைசெய்யவேண்டும்.--கு. அருளரசன் (பேச்சு) 13:32, 1 ஏப்பிரல் 2024 (UTC)
எத்தனை வீதம் திருத்தம் செய்ய வேண்டும்?
எத்தனை வீதம் திருத்தம் செய்ய வேண்டும்? எத்தனை வீதம் திருத்தம் செய்தால் கட்டுரையை பிரசுரிக்க ஃ வெளியிட முடியும்? அந்த வீதம் எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது? ~AntanO4task (பேச்சு) 04:41, 9 ஏப்பிரல் 2024 (UTC)
கூகுள் தமிழாக்கம் - பொதுவாகக் காணப்படும் சிக்கல்கள்
உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி பயன்படுத்தியோ நேரடியாக மொழிபெயர்த்தோ எழுதப்படும் கட்டுரைகளில் பின்வரும் சிக்கல்களைக் காண்கிறேன்.
நம்மால் நேரடியாகவே Google Translate பயன்படுத்த முடியும் என்றாலும், இந்தக் கருவியைப் பயன்படுத்தும்போது, மேற்கோள்கள், உள்ளிணைப்புகள், வார்ப்புருக்கள் தாமாகவே அமைந்துவிடுவதால், பலரும் இக்கருவியை விரும்பிப் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து இக்கருவியைப் பயன்படுத்தி ஒரு முறை ஒரு பத்தியை மட்டும் மொழிபெயர்த்துவிட்டுத் தமிழ் விக்கிப்பீடியாவில் இட்டால், மீண்டும் ஆங்கில விக்கிப்பீடியாவில் எஞ்சியுள்ள பகுதிகளை மொழிபெயர்க்க இக்கருவியைப் பயன்படுத்த முடியாது. அப்படியே வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தினால், இடைப்பட்ட நேரத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் அக்கட்டுரையில் வேறு பயனர்கள் செய்திருக்கக்கூடிய மாற்றங்களை அழித்தே பதிப்பிக்க முடியும். இதன் காரணமாக, பயனர்கள் பலரும் ஒரே மூச்சில் முழுக்கட்டுரையையும் மொழிபெயர்த்துப் பதிப்பிக்க முயல்கிறார்கள் என்று புரிந்துகொள்கிறேன்.
அவ்வாறு செய்யும்போது, முழு கட்டுரையிலும் உரிய கவனத்தை செலுத்த முடிவதில்லை என்று நினைக்கிறேன். பிறகு தேவையான மாற்றங்களைச் செய்வோம் என்று எண்ணிப் பதிப்பிப்பவர்கள் அப்படியே மறந்துவிடலாம். அவர்கள் புதிதாக மேலும் பல கட்டுரைகளை உருவாக்கும்போது, முந்தைய கட்டுரைகளை மேம்படுத்தும் குன்றலாம்.
ஆங்கில விக்கிபீடியா கட்டுரைகள் யாவும் செம்மையானவை அல்ல. அவற்றையும் மேம்படுத்த முடியும். அக்கட்டுரைகளை மொழிபெயர்க்கும்பொழுது தேவையில்லாத பகுதிகளை நீக்கியும் சுருக்கியும் எழுதலாம். குறிப்பாக, ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளை வரிக்கு வரி அப்படியே fullstop, comma விடாமல் மொழிபெயர்க்காமல் தமிழ் மொழி நடைக்கு ஏற்ப மாற்றி எழுதுவது அவசியமாகும்.
நீண்ட சொற்றொடர்களைப் பிரித்து இரண்டு அல்லது மூன்று சொற்றொடர்களாக மாற்றலாம். சொற்றொடர்களில் அமைந்திருக்கும் subject, verb, object வரிசையைத் தமிழ் மரபுக்கேற்ப மாற்ற வேண்டி இருக்கும். ஆங்கிலத்தில் மட்டுமே பயன்படும் சில idioms and phrases தமிழ் மொழி மரபுக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, ஒரு திரைப்படத்தின் விமர்சனம் the plot had loose ends என்று சொன்னால், அதை அப்படியே “கதையில் சில தளர்வான முனைகள் இருந்தன” என்று எழுதுவது ஏற்புடையது அன்று. இதையே தமிழில் எழுதும்போது, “கதையில் பல ஓட்டைகள் இருந்தன” என்று எழுதுவதே இயல்பாக இருக்கும். ஆங்கிலச் சொற்றொடர்களை அப்படியே சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்காமல் கருத்தை மட்டும் உள்வாங்கிக்கொண்டு நாமே தமிழில் எழுத முனையலாம். தேவைப்படும் இடங்களில் ஆங்கிலச் சொற்றொடர்களை paraphrasing செய்யலாம். Simple Englishக்கு மாற்றி, பிறகு மொழிபெயர்க்கலாம். இவற்றைச் செய்யப் பல புதிய, இலவச AI கருவிகள் உள்ளன. இவ்வாறான AI கருவிகளைப் பயன்படுத்துதல், மொழியாக்கத் திறனை வளர்த்துக் கொள்வதற்கான சிறப்புப் பயற்சிகள் தேவைப்பட்டால் அவற்றையும் ஏற்பாடு செய்ய முயல்வோம்.
நமக்கு ஆர்வம், வாசிப்புப் பயிற்சியுள்ள துறைகளில் மட்டும் மொழிபெயர்ப்பு செய்வது நல்லது. அவ்வாறு வாசிப்புப் பயிற்சி இல்லாத துறைகளில் தொடர்புடைய தமிழ்நூல்களை வாங்கிப் படித்து உரிய கலைச்சொற்களை அறிந்து கொண்டு தொடர்ந்து பங்களிக்கலாம். ஒரு திரைப்படம் என்றால் அதனைப் பார்த்துவிட்டு, அதன் கதையை நாமே நம் சொந்த நடையில் எழுத முனையலாம். நமக்கு அறிமுகமாகாத பிற மொழிப் பெயர்கள் என்றால் அவற்றின் மூல மொழி ஒலிப்புகளை அறிந்து கொண்டு தமிழில் எழுதலாம்.
ஆங்கில விக்கிப்பீடியாவைப் படித்துப் பார்த்தால் தான் உண்மையில் பல தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து இவ்வாறான கட்டுரைகள் குவிவது, பயனர்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளைப் படிப்பதற்கான ஆர்வத்தைக் குறைத்து விடும். தமிழ் விக்கிப்பீடியாவின் மதிப்பையும் குலைத்து விடும்.
ஆகவே, ஒரு முழு கட்டுரையையும் மொழிபெயர்க்க வேண்டும் என்கிற அழுத்தத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல், செறிவான அறிமுகப்பகுதியை மொழிபெயர்ப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம். மற்ற பகுதிகளில் தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு பகுதிக்குள் கூட தேவையற்ற கூடுதல் தகவல், விளக்கங்களை நீக்கிவிட்டு எழுதலாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி. - இரவி (பேச்சு) 09:17, 10 திசம்பர் 2024 (UTC)[பதிலளி]
@Ravidreams: //இக்கருவியைப் பயன்படுத்தி ஒரு முறை ஒரு பத்தியை மட்டும் மொழிபெயர்த்துவிட்டுத் தமிழ் விக்கிப்பீடியாவில் இட்டால், மீண்டும் ஆங்கில விக்கிப்பீடியாவில் எஞ்சியுள்ள பகுதிகளை மொழிபெயர்க்க இக்கருவியைப் பயன்படுத்த முடியாது// அவ்வாறு இல்லை. வேறு வழியாக மணல்தொட்டியிலும் அதே பக்கத்தை மொழிபெயர்க்க முடிகிறது. மேலும் அதே பக்கத்தை, அதே பக்கத்தில் பலமுறை மொழிபெயர்க்கலாம். இதில் இன்னொரு பிரச்சினை உள்ளது. ஒரு கட்டுரையை மொழிபெயர்க்கும் போது, ஏற்கனவே உள்ள அதே தலைப்பில் அமைந்த கட்டுரையை நீக்கிவிட்டு மொழிபெயர்த்து தருகிறது. (ஏற்கனவே கட்டுரை உள்ளது என்ற எச்சரிக்கை வருகிறது, அப்படி உருவாக்கப்படும் கட்டுரை புதிய கட்டுரை என்ற பட்டியலில் வருவதில்லை. தகவலுக்கு என்னுடைய மணற்தொட்டியின் பக்க வரலாறைக் கவனியுங்கள்)-- சா. அருணாசலம் (உரையாடல்) 02:18, 29 சனவரி 2025 (UTC)[பதிலளி]
இப்போது வந்துள்ள இக்கருவியின் புதிய பதிப்பில் ஏற்கனவே பதிப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் துணைப்பகுதிகளையும் தேர்ந்தெடுத்துத் தமிழாக்கலாம். எனவே, முழு கட்டுரையும் ஒரே மூச்சில் பதிப்பிக்க வேண்டும் என்கிற அவசரமின்றி தமிழாக்கலாம். அதே போல், ஏற்கனவே உள்ள கட்டுரைகளைத் தரமுயர்த்தவும் துணைப்பகுதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழாக்கிக் கட்டுரையை மெருகேற்றலாம். - இரவி (பேச்சு) 07:15, 28 மார்ச்சு 2025 (UTC)
உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி வரமாக வந்து சாபமாக மாறிவருகிறதோ என்ற வருத்தம் அண்மைக்காலமாக ஏற்படுகிறது. புதுப் பயனர்கள் அறியாமையால் தவறு செய்கிறார்கள். பழைய பயனர்களும் சில சமயங்களில் //பிறகு தேவையான மாற்றங்களைச் செய்வோம் என்று எண்ணிப் பதிப்பிப்பவர்கள் அப்படியே மறந்துவிடலாம்.// என்று இரவி கூறியதைப் போல ஒரு கட்டுரையை முழுமையாக செம்மைப் படுத்தாமல் பதிப்பித்து. ஏதோ காரணத்தினால் அப்படியே விட்டுவிட்டு அடுத்த கட்டுரையை மொழிபெயர்க்கும் ஆர்வத்தில் சென்றுவிடுவதும் நேர்கிறது. இதுபோன்ற செம்மைப்படுதப்படாத கட்டுரைகள் அதிகரிப்பது தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர் காலத்துக்கு நல்லதல்ல. எனவே கட்டுரையின் எண்ணிக்கை என்னும் மாயமான் பின்னால் ஓடுவதை சற்று மட்டுப்படுத்திக் கொண்டு தரத்தை முதல் நோக்கமாக கொள்ளவேண்டும் என்று வேண்டுகிறேன். ஏதோ ஒரு விசயத்தை தமிழில் அறிய வரும் ஒருவர் செம்மைப்படுத்தப்படாத ஒரு கட்டுரையைப் படித்தால், அவருக்கு தமிழ் விக்கிப்பீடியா குறித்து எதிர்மறையான பிம்பம் ஏற்படும் வாய்ப்பு உண்டாகும். அதன் பின்னர் அவர் மீண்டும் இங்கு படிக்க வரமாட்டார். எனவே பயனர்கள் இதில் கவனமுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--கு. அருளரசன் (பேச்சு) 00:57, 17 மார்ச்சு 2025 (UTC)
விருப்பம் - இரவி (பேச்சு) 08:19, 28 மார்ச்சு 2025 (UTC)